Latest Updates
-
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்..
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் ஒரு கிரகம் சில கிரகங்களுடன் இணக்கமாகவும், மற்ற கிரகங்களுடன் பகையாகவும் இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் அதிபதியாக இருக்கும். ஒரு கிரகம் அதனுடன் ஒத்துப் போகும் மற்றொரு கிரகத்தின் ராசியில் இருக்கும் போது நல்ல பலன்களும், பொருந்தாத கிரகத்தில் இருக்கும் போது பாதகமான பலன்களும் உருவாகும். இதன் விளைவுகள் அந்ததந்த ராசிகளில் பிறந்தவர்களையும் பாதிக்கும்.
கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் அடுத்த மாதம் சிம்ம ராசிக்கு மாறுகிறார். சிம்ம ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார். எனவே இந்த பெயர்ச்சியால் நல்ல விளைவுகளே ஏற்படும். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இந்த ராசி மாற்றத்தின் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அந்த ராசிகள் எஎன்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் லக்ன பாவத்தில் இந்த ராசி மாற்றம் நிகழும். எனவே, இந்த காலகட்டத்தில், அவர்கள் மீதான மற்றவர்களின் பாராட்டு மிகவும் அதிகரிக்கும். இத்துடன் சமூகத்தில் அங்கீகாரமும் அந்தஸ்தும் தேடி வரும். குறிப்பாக மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் பல நன்மைகள் உண்டாகும்.
மேலும் தினசரி வருமானமும் அதிகரிக்கும். புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், அது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். திருமணமானவர்களுக்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் லாபம் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த ராசி மாற்றம் இந்த ராசியின் வருமானம் தொடர்பான அம்சத்தில் ஏற்படுகிறது. அதனால் அவர்களின் வருமானம் இந்த நேரத்தில் வெகுவாக அதிகரிக்கும். மேலும், இந்த நேரம் முதலீடு செய்வதற்கும் மிகவும் சாதகமானது. இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் லாபகரமாக இருக்கும்.
வியாபாரம் செய்பவர்கள் புதன் சஞ்சாரத்தால் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தும் அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும், குழந்தைவரம் சம்பந்தமான நல்ல செய்திகளைக் கேட்கலாம். இந்த நேரத்தில் பங்கு முதலீடு மற்றும் லாட்டரி போன்ற எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெறலாம்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் ஒன்பதாம் வீட்டில் ராசி மாற்றம் நடைபெறுகிறது. எனவே இந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். எல்லாவற்றிலும் அதிர்ஷ்டம் இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
தொழிலில் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகளும், வேலையில் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். இடைநிறுத்தப்பட்ட பணிகளை மீண்டும் தொடரலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

