புதன் பெயர்ச்சியால் இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..

Mercury Transit In Cancer on 27 June 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் கிரகங்களில் புதன் 27 நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி புதன் சந்திரனின் ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடக ராசிக்குள் புதன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

Mercury Transit In Cancer on 27 June 2024 These Zodiac Signs Will Be Lucky In Tamil

குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இப்போது புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவேகமும் அதிகரித்து அனைத்து வேலைகளையும் பொறுமையாகவும், திறம்படவும் செய்து முடிப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். இந்த மாற்றமானது மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைப் பெறலாம். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாககலாம். நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் நற்பெயரையும், புகழையும் பெறுவீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். முதலீடுகளை செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, லாபத்தையும் அள்ளித் தரும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, June 24, 2024, 10:14 [IST]
Desktop Bottom Promotion