Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
Mercury Transit In Aquarius In February 2026: ஜோதிடத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் பல கிரகங்கள் அடுத்தடுத்து ராசியை மாற்றவுள்ளன. இதனால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதுவும் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ராசியை மாற்றவுள்ளார்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் பிப்ரவரி 03 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானின் ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவாலாக இருக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் பல பிரச்சனைகளையும், வியாபாரத்தில் தடைகளையும் சந்திக்க நேரிடும். மேலும் மன அழுத்தம், முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் வேலை தொடர்பான சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். இப்போது பிப்ரவரியில் கும்ப ராசிக்கு செல்லும் புதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். வேலையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். சிறு வேலைகளை கூட கஷ்டப்பட்டு செய்ய வேண்டியிருக்கும். முதலீடுகளை செய்வதையோ, பயணங்களை மேற்கொள்வதையோ தவிர்க்க வேண்டும். அதிக வேலைப்பளுவால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். மொத்தத்தில் பொறுமையாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராக்காரர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு பிரச்சினைகள் ஏற்படலாம். தொழிலில் மந்தநிலை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்யும் போது அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் கவலை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் தாமதமாகும். நண்பர்களுடனான உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளின் போது சிரமங்களை சந்திக்க நேரிடும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில் அதிருப்தி அதிகரிக்கும். பணப் பிரச்சனைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் எந்த ஒரு பயணங்களையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications