Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 11 முதல் இந்த ராசிக்காரர்களின் தொழிலில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...
Mercury Transit In Aquarius 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. கிரகங்களில் புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் ஒருவரது வாழ்வில் தெரியும். தற்போது புதன் சனி பகவானின் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 11 ஆம் தேதி புதன் சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

புதன் கும்ப ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இந்த புதன் பெயர்ச்சியால் இதுவரை தொழிலில் பிரச்சனைகளை சந்தித்து வந்த சில ராசிக்காரர்கள் அளப்பரிய நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீடான தொழில் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நிறைய நிதி ஆதாயங்களும் கிடைக்கும். தொழில் ரீதியாக, மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளால் சிரமப்படக்கூடும். காதல் வாழ்க்கையில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், தொழில் ரீதியாக பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். முக்கியமாக நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால், பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதன் வாழ்க்கையின் பல பகுதிகளில் நன்மைகளை வழங்கவுள்ளார். அதுவும் ராசிநாதன் புதன் 6 ஆவது வீட்டில் இருப்பதால், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். தொழிலில் பல நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications