Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Mercury Transit 2025 In Sadayam Nakshatra: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் தெரியும்.
அந்த வகையில் புதன் பிப்ரவரி 15 ஆம் தேதி சதய நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். 27 நட்சத்திரங்களில் சதயம் 24 ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. ஜோதிடத்தில் ராகுவுக்கும், புதனுக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கு முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன்வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களால் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதனால் நிதி நிலை மேம்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியானது பல நன்மைகளை வழங்கவுள்ளது. முக்கியமாக பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நிறைய லாபத்துடன் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். இதனால் எடுக்கும் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications