Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
கிருஷ்ண ஜெயந்தியன்று உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப் போகுது...
Mercury Rise In Cancer On 26 August 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், பேச்சு, வியாபாரம், தொழில், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது புதன் கடக ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அதே சமயம் அஸ்தமன நிலையிலும் உள்ளார். இந்நிலையில் புதன் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி நாளில் உதயமாகவுள்ளார். கடக ராசியில் புதன் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தரப் போகிறது. இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் உதயமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் இலக்குகளை அடைவார்கள். அதோடு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர் கிடைக்கலாம். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











