Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: ஆகஸ்ட் 05 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Retrograde In Leo On 05 August 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபரின் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவை சிறப்பாக இருக்கும்.
இப்படிப்பட்ட புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ஜூலை 19 ஆம் தேதி தான் நுழைநதார். இந்நிலையில் ஆகஸ்ட் 05 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் வக்ரமாகவுள்ளார்.

இப்படி வக்ர நிலையில் ஆகஸ்ட் 29 வரை இருப்பார். புதன் வக்ரமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரமானது பல அற்புதமான நன்மைகளை வழங்கவுள்ளது. இப்போது புதன் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல பாராட்டு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் உங்கள் இலக்கை சிறப்பாக அடைபீர்கள். வணிகர்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பங்குச் சந்தையில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்து வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம். வணிகர்கள் தங்கள் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணம் காரணமாக பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்த பயணமும் நல்ல பலனைத் தரும். புத்திசாலித்தனத்தால் சமூகத்தில் மரியாதையைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் உங்கள் முன்னேற்றத்தில் இதுவரை சந்தித்த தடைகள் நீங்கும். வியாபாரிகள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முக்கியமாக இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடனான உறவு ரொமான்டிக்காக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications