Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
சிம்மத்தில் வக்ரமாகும் புதன்: இன்னும் 5 நாட்களில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Mercury retrograde In Leo On 05 August 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். கிரகங்களிலேயே புதன் மிகச்சிறியது. அதே சமயம் மிகவும் முக்கியமானதும் கூட. ஜோதிடத்தில் இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடிய கிரகமாகும்.
இந்த புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான் அந்நபர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பார், படிப்பில் மற்றும் பேச்சில் வல்லவராகவும், நல்ல புத்திசாலியாகவும் இருப்பார். இப்படிப்பட்ட புதன் ஜூலை 19 ஆம் தேதி தான் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 05 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார்.

புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் புதன் வக்ரமாகும் போது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது சிம்ம ராசியில் வக்ரமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எடுத்த காரியங்களில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த வேலையில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல நன்மைகளைத் தருவதாக இருக்கும். வியாபாரிகளும் அதிக லாபத்தைப் பெறுவார்கள். அதோடு நிலுவையில் இருந்த வேலைகளும் நல்லபடியாக முடியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிறைய செல்வத்தை குவிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களால் இலக்கை அடைய முடியும். தொழிலைப் பொறுத்தவரை, புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் வெற்றியின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் முதலீடுகளை செய்தால், அதில் நல்ல லாபத்தைப் பெற முடியும். வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதனால் இருவருக்கும் இடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications