Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
வக்ர நிலையில் கடகம் செல்லும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது...
Mercury Retrograde In Cancer On 22 August 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். தற்போது இந்த புதன் சிம்ம ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி இந்த புதன் வக்ர நிலையில் கடக ராசியை அடைந்து பயணிக்கவுள்ளார். வக்ர நிலையில் கடக ராசியை புதன் அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும்.

இருப்பினும் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ள புதனால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இப்போது வக்ர நிலையில் கடகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையால் உயர் அதிகாரிகளை கவர்வார்கள். இதன் விளைவாக அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். கூடுதலாக கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் வேலை அனைவராலும் பாராட்டப்படும். நீண்ட நாட்களாக வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், உங்களின் ஆசை நிறைவேறும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் செயல்திறனால் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய செல்வத்தை சேமிக்க முடியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
