Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
புதன் வக்ரமாவதால் இந்த 5 ராசிக்கு திடீர் பண வரவும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படப்போகுது...
Mercury Retrograde In Aquarius 2026: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது புதன் மகர ராசியில் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 10 ஆம் தேதி புதன் சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி புதன் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

இந்த நிலையில் மார்ச் 23 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால் மோசமான பலன்கள் மட்டும் தான் கிடைக்கும் என்பதில்லை, சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. குறிப்பாக தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம், நிதி நிலையில் உயர்வு போன்றவை கிடைக்கப்போகிறது. இப்போது கும்ப ராசியில் புதன் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். நிதி நிலைமை வலுவடையும். இக்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நீண்டகால வெற்றிக்கு வழிவகுக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம் மற்றும் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறலாம். எழுத்து, கணக்கியல், ஆராய்ச்சி அல்லது கல்வித் துறைகளில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சட்ட பிரச்சனைகள் தீரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஊடகம் அல்லது தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பழைய வணிக ஒப்பந்தங்கள் திடீர் லாபத்தைத் தரக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். இனிமையான பேச்சால் உறவுகள் மேம்படும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் புதிய யோசனைகள் தோன்றும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நீங்கள் போடும் திட்டங்கள் நீண்டகால நன்மைகளை வழங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications