Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சிம்மத்தில் புதன்-சந்திரன் சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Mercury Moon Conjunction In Leo On 05 August 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது கிரகங்களின் இளவரசனான புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் ஆகஸ்ட் 05 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால் சிம்ம ராசியில் புதன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. சிம்ம ராசியில் புதனும், சந்திரனும் இணைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும், 3 ராசிக்காரர்களுக்கு இச்சேர்க்கையானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் வியாபாரத்தில் முன்னேற்றமும், நிதி நிலையில் உயர்வும் ஏற்படவுள்ளது. இப்போது சிம்ம ராசியில் புதனும் சந்திரனும் ஒன்றிணைந்து பயணிப்பதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பேச்சு இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு அற்புதமாக இருக்கும். சிலர் எதிர்பாராத பணத்தை பெறவும் வாய்ப்புள்ளது. காதலித்து வந்தால், அந்த காதல் வெற்றி அடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் தாயாருடனான உறவு மேம்படும். அவர்களால் நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் மற்றும் பேச்சால் பல முக்கியமான வேலைகள் முடிவடையும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 நாட்கள் அதிர்ஷ்டமாக இருக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பெயரும், புகழும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலைகளில் வெற்றிகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய சொத்து மற்றும் வாகனத்தை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications