Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
கடகத்தில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஆகஸ்ட் 29 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Mercury Direct In Cancer On 29 August 2024: கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார். இப்படி ஏற்படும் மாற்றங்களால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது புதன் கடக ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் மற்றும் தடை ஏற்படும். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி புதன் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். இப்போது புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இநத ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். போட்டியாளருக்கு நல்ல கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை எளிதில் அடைவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு புதிய ஆர்டர் அல்லது ஒப்பந்தம் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். நீண்ட நாட்களாக நடந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications