Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
சிம்மத்தில் அஸ்தமனமாகும் புதன்: இன்னும் 5 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப் போகுது..
Mercury Combust In Leo On 14 September 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவசரனாக கருதப்படும் புதன், 21 நாட்களில் ராசியை மாற்றுவார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், ஒருவரது புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு போன்றவற்றில் தாக்கம் தெரியும்.
அந்த வகையில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தான் புதன் சிம்ம ராசியில் நுழைந்தார். இந்த சிம்ம ராசியில் புதன் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார். கிரகங்கள் அஸ்தமனமாகும் போது, பலவீனமாக இருப்பதால், அதன் மூலம் கிடைக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும். அதோடு புதன் தற்போது சிம்ம ராசியில் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகத்தையும் உருவாகியுள்ளார்.

இந்நிலையில் அஸ்தனமாகவுள்ள புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப்போகிறது. இப்போது சிம்ம ராசியில் அஸ்தமனமாகவுள்ள புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும். நீண்ட நாட்களாக மந்தமாக இருந்த தொழில் சூடுபிடிக்கும். நிதியைப் பொறுத்தவரை, புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதோடு தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். அலுலகத்தில் உங்களிடம் பெரிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் மூலம் வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலை வெற்றிகரமாக முடிவடைந்து, அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications