Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
பணக்கார பெண்ணை மணக்கும் அதிர்ஷ்டமும், திறமையும் உள்ள டாப் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பணக்கார வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டுமென்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள், இதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடுகள் இல்லை. பணக்கார மனைவியை அடைய ஆண்களுக்கு திறமையும், வசீகரமும் மட்டும் போதாது, நிச்சயம் அதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். ஆனால் அனைத்து ஆண்களுக்கும் அந்த அதிர்ஷ்டம் உள்ளதா என்றால் நிச்சயம் அது கேள்விக்குறிதான்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பணக்கார பெண்களைக் கவரும் திறமையும், வசீகரமும் உள்ளது. அதே சமயம் கிரகங்களின் ஆசீர்வாதத்தால் அதிர்ஷ்டமும் உள்ளது. அவர்களின் புத்திக்கூர்மையாலும், அதிர்ஷ்டத்தாலும் அவர்கள் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் துலாம் ராசி ஆண்கள். துலாம் ராசி ஆண்கள் அழகானவர்கள், வெளிதோற்றத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் உள்ளமும் அழகானதுதான். அவர்களின் வசீகரமும், புத்திக்கூர்மையும் இயற்கையாகவே பணக்கார பெண்களை ஈர்க்கும். அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமானசுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் உலகில் உருவாக்குபவர்களாக இருப்பார்கள். அவர்களின் செயல்பாடுகள் அவர்களை அனைவருக்கும் பிடித்தவர்களாக மாற்றும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் தங்களை எவ்வாறு முன்னிறுத்துவது, சரியான விஷயங்களைச் சொல்வது மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவது எப்படி என்பதை அறிவார்கள். பணக்கார பெண்கள் பெரும்பாலும் அவர்களின் ரசனை, ராஜதந்திரம் மற்றும் அவர்களை நேசிக்க வைக்கும் திறன் ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள். துலாம் ராசி ஆண்கள் வேண்டுமென்றே பணக்கார மனைவிகளைத் தேட மாட்டார்கள், ஆனால் அவர்களின் அன்பான மனம் மற்றும் வாழ்க்கை முறை அவர்களை அதை நோக்கி வழிநடத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசி ஆண்கள் இயல்பாகவே தங்கள் வாழ்க்கையில் ஆறுதல், ஆடம்பரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை விரும்புகிறார்கள், எனவே அவர்கள் பெரும்பாலும் பணக்கார பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். துலாம் ராசியைப் போலவே சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்களும் நம்பமுடியாத அளவிற்கு வசீகரமும், மனஉறுதியும் கொண்டவர்கள். ஒரு பெண்ணைப் பாதுகாப்பாகவும், அன்பாகவும், பாராட்டப்பட்டவராகவும் உணர வைப்பது எப்படி என்பதை இவர்களை விட நன்கு அறிந்தவர்கள் யாரும் இல்லை, இது பணக்கார பெண்களைஅவர்களை நோக்கி இயல்பாகவே ஈர்க்கும்.
ரிஷப ராசி ஆண்கள் பொறுமையானவர்கள், விசுவாசமானவர்கள் மற்றும் வலுவான, நிலையான உறவுகளை உருவாக்குவதில் சிறந்தவர்கள். அவர்களின் நிலைத்தன்மை மற்றும் உறவுகளில் கடைபிடிக்கும் நேர்மை பணக்கார பெண்களை எளிதில் ஈர்க்கின்றன. அவர்களை நம்பிக்கைக்குரியவர்களாக அனைவரும் பார்க்கிறார்கள்.
மகரம்
மகர ராசி ஆண்கள் லட்சியம், ஒழுக்கம் மற்றும் எதார்த்த வாழ்க்கைக்கு ஏற்ற குணங்கள் கொண்டவர்கள், இவை பணக்கார பெண்கள் மதிக்கும் மற்றும் அவர்களை ஈர்க்கும் குணங்களாகும். சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் எப்படி அந்தஸ்தை அடைய வேண்டும் என்பது நன்கு தெரியும், மேலும் அவர்கள் வாழ்க்கையில் அதிகாரத்தை அடைய வேண்டுமென்பதை நன்கு அறிந்தவர்கள்.
மகர ராசி ஆண்கள் தற்காலிக வெற்றியை விட நீண்ட கால வெற்றி மற்றும் அதிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு பணக்கார பெண் அவர்களை ஒரு துணையாக மட்டுமல்ல, தனது செல்வம் மற்றும் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பவர்களாகவும் காணலாம். அவர்களின் முதிர்ச்சி, சுய கட்டுப்பாடு மற்றும் மரியாதை உணர்வு ஆகியவை வாழ்க்கையில் வெற்றியடைந்த பெண்களை அவர்களிடம் ஈர்க்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












