Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
இந்த 4 ராசி ஆண்கள் அவங்க மனைவியை எப்பவும் மதிக்கவே மாட்டார்களாம்... உங்க கணவர் ராசி இதுல இருக்கா?
காதல்தான் ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை வழங்குவதாக இருக்கும், ஆனால் அனைவருக்கும் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு காதல் உறவின் வெற்றி மற்றும் நீடித்த தன்மையைத் தீர்மானிப்பதில் இணக்கத்தன்மையும், ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் மரியாதையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒருவர் எவ்வளவுதான் தங்கள் துணையை தீவிரமாக நேசித்தாலும் தங்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது நிச்சயமாக அந்த உறைவைத் தொடர விரும்ப மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக சிலர் தங்கள் துணையை எப்போதும் மதிக்காமல் அவர்களை உதாசீனப்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் காதலி/மனைவியை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் தங்கள் துணையை மதிக்காதவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ஒரு ஆரோக்கியமான காதல் உறவின் ஒரு அடிப்படைத் தூண் ஆறுதலும், நம்பிக்கையும்தான், ஆனால் மேஷ ராசிக்காரர்களுக்கு, இது எப்போதும் இயல்பாக வருவதில்லை. மேஷ ராசிக்காரர்கள் தங்கள் உறுதியான மனப்பான்மைக்கும், தலைமை தாங்கும் விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்கள், அவர்களுக்கு அனைத்தையும் விட தங்களின் லட்சியங்களும், விருப்பங்களும்தான் முக்கியம், அவர்களுக்கு காதல் கூட இரண்டாம் பட்சம்தான்.
அவர்களின் இந்த உறுதிப்பாடு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அது சில சமயங்களில் தங்கள் துணைகளுக்குத் தேவையான ஆதரவையும், அவர்கள் எதிர்பார்க்கும் மரியாதையையும் வழங்காத போக்கிற்கு வழிவகுக்கும். மேஷ ராசி ஆண்கள் தங்கள் துணையின் தேவைகளைப் புறக்கணிக்கக்கூடும், இதனால் அவர்கள் தங்கள் துணையை மதிக்காத காதலர்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் சாகசத்தை விரும்பும் ஆன்மாக்களாக இருப்பார்கள். சுதந்திரம் மற்றும் புதிய விஷயங்களை ஆராய்வதில் அவர்களுக்குள்ள ஆர்வம், அவர்களின் துணைக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், மரியாதையும் புறக்கணிக்கக்கூடும். அவர்கள் உறவுகளில் உற்சாகத்தையும், சுவாரஸ்யமான தருணங்களையும் கொண்டு வந்தாலும், தனுசு ராசிக்காரர்கள் உறவுகளில் அர்ப்பணிப்புடன் இருப்பதில் சிரமப்படலாம்.
மேலும் தங்கள் துணைகளுக்கு மிகவும் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் எப்போதும் உடனிருக்க மாட்டார்கள். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் அனுபவங்களைத் தேடும் அவர்களின் நாட்டத்தால், பெரும்பாலும் அவர்கள் தங்கள் துணையின் உணர்ச்சித் தேவைகளை மறந்து விடுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற வேண்டும் என்ற தங்கள் லட்சியத்தாலும், மன உறுதியாலும் உந்தப்படுகிறார்கள். தொழில் வாழ்க்கையில் அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அது சில சமயங்களில் உறவுகளில் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், மரியாதையும் வழங்கும் அவர்களின் திறனை மறைத்துவிடக்கூடும். மகர ராசி ஆண்கள் தங்கள் தொழில் இலக்குகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து, தங்களுக்கு நெருக்கமானவர்களின் தேவைகளைப் புறக்கணிக்கலாம். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் காதலி.மனைவியை மதிக்காத ராசிகளில் ஒன்றாக அவர்களுக்கேத் தெரியாமல் மாறிவிடுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தனித்துவமான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இயல்புக்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்தப் பாதையில் பயணிப்பவர்கள் மற்றும் தீவிர சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களின் புதுமையான சிந்தனை கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், காதல் விவகாரங்களில் அவர்களுக்கு அது பாதகமான முடிவுகளை ஏற்படுத்தும், இதனால் அவர்களின் காதல் உறவில் இடைவெளிக்கு வழிவகுக்கும். கும்ப ராசி ஆண்கள் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கோ அல்லது வெளிப்படுத்துவதற்கோ சிரமப்படலாம், இது தேவைப்படும் நேரங்களில் அவர்களின் துணையை ஆதரவற்றவர்களாவும், முக்கியத்துவம் இல்லாதவர்களாகவும் உணரச் செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
