Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசி ஆண்களுக்கு எல்லோரையும் விட அவங்க மனைவிதான் முக்கியமாம்... அவங்களுக்கு எதுவும் நடக்க விடமாட்டாங்க!
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். அனைத்து பெண்களின் கனவும் தங்களுக்கு ஆதரவான கணவர் கிடைக்க வேண்டுமென்பதுதான். ஆனால் இந்த கனவு அவர்களுக்கு நிறைவேறுகிறதா என்றால் பெரும்பாலான பெண்களுக்கு இது வெறும் கனவாக மட்டுமே மாறிவிடுகிறது. விதிவிலக்காக சில ராசி பெண்களுக்கு அவர்கள் விரும்பிய ஆதரவான கணவர் கிடைக்க வாய்ப்புள்ளது.
இப்படி ஆதரவான கணவராக இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவராக இருப்பார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு ஆதரவாக நிற்கும் தூண்களாக இருப்பார்கள்.

அவர்கள் எந்த சூழ்நிலையிலும், யார் முன்னிலையிலும் தங்களின் மனைவியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் தங்கள் மனைவிக்கு மிகவும் ஆதரவான கணவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசி ஆண்கள் தங்கள் தைரியத்திற்கும் உறுதிக்கும் பெயர் பெற்றவர்கள். குடும்பத்தின் முன்னிலையில் அவர்கள் தங்கள் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துவது மட்டுமின்றி, தங்கள் மனைவியை தேவையற்ற கேள்விகளுக்கு ஆளாகாமல் பாதுகாக்கவும் முன்வருகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தங்களின் மனைவியை மற்றவர்களின் முன்னிலையில் விட்டு கொடுக்கமாட்டார்கள், அது அவர்களின் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. அவர்களின் தைரியமான மற்றும் உறுதியான குணம் அவர்களுடைய மனைவியை பாதுகாக்கும்.
கடகம்
கடக ராசி ஆண்கள் எப்போதும் தங்கள் மனைவியை பாதுகாக்கும் கவசமாக இருப்பார்கள். அவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கும் அக்கறையான குணத்தால், அவர்கள் தங்கள் மனைவிக்கு ஆறுதலான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். தங்கள் மனைவி மீது குற்றச்சாட்டு எழும் போது, கடக ராசி ஆண்கள் உடனடியாக அவர்களை பாதுகாப்பார்கள் மற்றும் அந்த சூழ்நிலையிலிருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவார்கள்.
துலாம்
துலாம் ராசி ஆண்கள் சமநிலையைக் கடைபிடிப்பதிலும் மற்றும் ராஜதந்திரத்திலும் வல்லவர்கள். குடும்பச் சூழலில், அவர்கள் சமாதானம் செய்பவர்களாக செயல்பட்டு, நல்லிணக்கம் நிலவுவதை உறுதி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவிக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள், தங்கள் மனைவியை யாரும் கேள்வி கேட்காமல் இருக்கும்படி பாதுகாக்கிறார்கள். அவர்களின் மனைவிக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஆழ்ந்த பச்சாதாபத்தைக் கொண்டுள்ளனர். ஒரு கணவராக அவர்கள் தங்கள் மனைவியின் தேவைகளையும், உணர்வுகளையும் அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்கிறார்கள். இந்த ராசி ஆண்கள் தங்கள் மனைவிக்கு அசைக்க முடியாத உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தங்கள் மனைவியை ஆதரவில்லாத சூழ்நிலையில் தவிக்க விடமாட்டார்கள். தங்கள் மனைவியின் உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
