Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 3 மாதங்களில் பிறந்த ஆண்கள் நேர்மையான கணவராக இருப்பார்களாம்... இவங்க கணவரா கிடைக்கிறது அதிர்ஷ்டம்...!
எந்தவொரு உறவும் நீண்ட காலம் நிலைத்திருக்கவும், வெற்றிகரமானதாக இருக்கவும் அந்த உறவில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டியது அவசியம். தற்போது பல உறவுகள் விரைவில் முடிவடைவதற்கு காரணம் நேர்மையின் பற்றாக்குறைதான். அனைவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய இந்த குணம் இப்போது வெகுசிலரிடம் மட்டுமே இருக்கிறது.
ஒரு பெண் தன் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் குணங்கள் விசுவாசம், நம்பகத்தன்மை மற்றும் உண்மையான அன்பு. ஆனால் இந்த குணங்கள் அனைத்து ஆண்களிடமும் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்களிடம் இந்த குணங்கள் நிறைந்திருக்கிறது. இந்த ஆண்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் நேர்மையான கணவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஜூன்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஜூன் மாத ஆண்கள். அவர்களுக்கு மிகப்பெரிய இதயம் உள்ளது, மேலும் அவர்களின் மனைவி மீது அவர்கள் வைத்திருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசம் எல்லை இல்லாதது. இந்த குணத்தால் அவர்கள் தங்கள் மனைவிக்கு கனவிலும் துரோகம் செய்யாதவர்களாக இருக்கிறார்கள்.
ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை மிகவும் ஆழமாக உணர்ந்து அதை நேர்மையாக வெளிப்படுத்துகிறார்கள். இது அவர்களை தங்கள் மனைவியுடன் உணர்ச்சிரீதியாக ஆழமாக இணைய அனுமதிக்கிறது, அவர்கள் தங்கள் உறவை வலுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
நேர்மையான கணவராக மட்டுமில்லாமல் அவர்கள் தங்கள் மனைவியை பாதுகாக்கும் கணவராகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையை பாதுகாக்கவும், அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்வார்கள். எப்போதும் தங்கள் மனைவியை பாதுகாப்பாகவும், அன்பாகவும் உணர வைக்க அவர்கள் பாடுபடுகிறார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண்கள் திருமண விவகாரங்களில் மிகவும் விசுவாசமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களிடம் இருக்கும் மிக முக்கியமான பண்பு, தங்கள் மனைவியிடம் அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு. அவர்கள் தங்கள் திருமண உறவைப் பராமரிக்க எதையும் செய்வார்கள். அவர்கள் மனைவி அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசம் அவர்களின் நேர்மையின் அடையாளமாகும்.
இவர்களும் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் உறவுகளில் நம்பமுடியாத உணர்ச்சித் தீவிரத்தைக் வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தங்கள் மனைவியுடன் உணர்வுரீதியாக இணைந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவுக்கு வெளியே மகிழ்ச்சியைத் தேடுவதை பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். வலுவான உறவின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், மேலும் அதைப் பராமரிக்க தயாராக இருக்கிறார்கள்.
அவர்கள் மனித உணர்வுகள் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர். இது அவர்களின் மனைவியின் தேவைகளை அவர்கள் சொல்லாமேயே புரிந்து கொள்ள உதவுகிறது. இது உறவில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகிறது, உறவுக்கு வெளியே தீர்வுகளைத் தேடுவதைத் தடுக்கிறது.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு, குறிப்பாக அவர்கள் நேசிப்பவர்களின் உணர்வுகள் மீது தீவிர அக்கறை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உணர்ச்சிகளையும் நல்வாழ்வையும் கவனித்துக் கொள்ள எப்போதும் கடினமாக உழைப்பார்கள், மேலும் உறவில் விசுவாசமாக இருப்பதை அவர்களின் வாழ்க்கையில் முதன்மையானதாக கருதுகிறார்கள்.
அவர்களை நேர்மையான கணவராக மாற்றும் பண்புகளில் ஒன்று அவர்களின் மனஉறுதி. அவர்கள் உறவுகளில் மிகவும் விசுவாசமாகவும், நிலையானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு உறவில் இணைந்து விட்டால், அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள், மேலும் மற்றொரு உறவைத் தேடத் தூண்டப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளும் தொடர்பின் ஆழத்தையும், உணர்ச்சிப் பிணைப்பையும் மதிக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












