Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
இந்த 4 மாதங்களில் பிறந்த ஆண்கள் மற்றவர்களை விட அழகானவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்பதுதான் எல்லோருடைய ஆசையாகும், ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியாது என்பதுதான் உண்மை. அனைவருக்கும் பிடித்தவராக இருக்க வேண்டுமென்றால் ஒருவரின் தோற்றம் உண்மையில் வசீகரமானதாக இருக்க வேண்டும். வசீகரமான தோற்றத்திற்கு ஒருவரின் தனிப்பட்ட முயற்சி காரணமாக இருந்தாலும் அவர்களின் பிறந்த ராசியும், மாதமும் உடல் தோற்றம் மற்றும் வசீகரத்திற்கு காரணமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில மாதங்களில் பிறந்த ஆண்கள் தனித்துவமான மற்றும் வசீகரமான தோற்றத்தைக் கொண்டுள்ளனர். அவர்களின் அடிப்படை குணம், ஆளும் கிரகம் மற்றும் உள்ளார்ந்த பண்புகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி சில மாதங்களில் பிறந்த ஆண்கள் மிகவும் வசீகரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் அசாதாரண தைரியத்தையும், சாகச உணர்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள். வசீகரமான தோற்றம், கட்டுமஸ்தான உடல் அமைப்பு மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கைப் போன்றவை அவர்களை மிகவும் வசீகரமானவர்களாக மாற்றுகிறது. தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் ஈர்க்கும் அளவுக்கு பயமில்லா வாழ்க்கையை வாழ்கிறார்கள். தன்னிச்சையான மற்றும் சுறுசுறுப்பான அவர்களின் நடவடிக்கைகள் அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் வசீகரத்தைச் சேர்க்கும். அவர்களின் மிகப்பெரிய வசீகரமான குணம் அவர்களின் தைரியம்தான்.
மே
மே மாதத்தில் பிறந்த ஆண்கள் நேர்த்தி மற்றும் வசீகரத்தின் உச்சமாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க விரும்புகிறார்கள், எனவே மிகவும் பொறுமையான மற்றும் உறுதியான ஆளுமையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இயற்கையாகவே வாழ்க்கையின் அனைத்து அழகியல் இன்பங்களையும் விரும்புகின்றனர். இவர்களின் வசீகரமான தோற்றம், அப்பாவித்தனம் மற்றும் நேர்மை, அவர்களின் வலிமையான ஆளுமையுடன் இணைந்து, அவர்களை யாராலும் தவிர்க்கமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமானவர்களாக மாற்றுகிறது.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிறந்த உடல் தோற்றம் மற்றும் கம்பீரமான இருப்பைக் கொண்டுள்ளனர். வலிமையான உடலமைப்பு மற்றும் உறுதியான சுயமரியாதையுடன், அவர்கள் இயல்பாகவே தலைமைப் பதவியை வகிக்கிறார்கள். அவர்கள் சக்திவாய்ந்த ஆளுமையுடன், அரவணைப்பையும், ஆற்றலையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் அரச அந்தஸ்தும், வசீகரமான ஒளியும் அவர்களை தவிர்க்க முடியாதவர்களாக மாற்றுகிறது, இது அவர்களை வசீகரத்தின் ராஜாவாக மாற்றுகிறது.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் கம்பீரமானவர்கள். அவர்கள் மிகவும் நாகரிமானவர்களாகவும், நேர்த்தியானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் மிகவும் ரசனையானவர்களாக இருப்பார்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் போதும் விஷேசமானதாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும், அவர்கள் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் சமநிலையைக் கடைபிடிப்பவர்கள். கவர்ச்சிகரமான பேசும் திறனுடன் இணைந்த ஒரு நேர்த்தியான சமநிலை உணர்வு அவர்களின் வசீகரத்தை மேம்படுத்துகிறது, இதனால், அவர்கள் மிகவும் அழகான ஆண்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












