இந்த 4 மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்பிருக்காம்... நீங்க பிறந்த மாதம் என்ன?

ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் முழுமையாக்குவது அவர்களின் திருமணம்தான். ஆனால் சிலர் திருமணம் செய்த பிறகும் தங்கள் வாழ்க்கை முழுமையற்றதாக இருப்பதாக நினைத்து வருந்துவார்கள். அதற்கு காரணம் அவர்கள் திருமணம் செய்த நபர் அவருக்கு பொருத்தமற்றவராக இருக்கலாம். அவர்கள் தங்கள் துணையிடமிருந்து உணர்ச்சிரீதியாகவும், மனரீதியாகவும் தொலைவில் இருப்பார்கள், ஒரு கட்டத்தில் இந்த தூரம் மிகவும் அதிகரிக்கும் போது அவர்கள் அந்த திருமணத்தை விட்டு வெளியேற துணிகிறார்கள்.

இதுபோன்ற சூழலில் விவகாரத்தே அவர்களின் இறுதி தீர்வாக இருக்கும். விவாகரத்துக்கு பிறகு அவர்கள் ஆறுதலைத் தேடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பார்கள். அனைவரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள், ஆனால் சிலர் நிச்சயம் செய்து கொள்வார்கள்.

Men Born On These Months Are Likely to Have a Second Marriage

ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த ராசி, நட்சத்திரம் மற்றும் பிறந்த மாதம் போன்றவை அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும். அதன்படி சில மாதங்களில் பிறந்த ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் திருமண உறவில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை எதிர்பார்ப்பார்கள். அவர்களின் முதல் திருமணம் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், அவர்கள் விரும்பும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு வாழ்க்கைத் துணையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத மனைவியுடன் ஒருபோதும் தங்கள் வாழ்க்கையை தொடர மாட்டார்கள். அடுத்த வாழ்க்கையை நோக்கி செல்வார்கள்.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் சுயமரியாதயையும், சுதந்திரத்தையும் மிகவும் மதிக்கிறார்கள். அவர்களின் முதல் திருமணத்தில் அவர்கள் தங்கள் சுதந்திரம் பறிபோவதாகவும், கட்டுப்படுத்தப்படுவதாகவும் உணர்ந்தால் அவர்கள் அந்த திருமணத்திலிருந்து வெளியேற விரும்புவார்கள். தங்களின் சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் தங்களின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவரை அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்கள்.

Men Born On These Months Are Likely to Have a Second Marriage

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை பராமரிக்க விரும்புகிறார்கள். அவர்களின் முதல் திருமணம் அவர்கள் தேடும் சமநிலை மற்றும் மகிழ்ச்சியை வழங்கவில்லை என்றால், அதை வழங்கக்கூடிய ஒரு துணையை அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் இரண்டாவது திருமணத்தில் அவர்கள் எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் தீவிரமான உணர்ச்சி ஆழம் மற்றும் ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் முதல் திருமணத்தில் மகிழ்ச்சியாக உணரவில்லை என்று உணர்ந்தால், மகிழ்ச்சிக்காக இரண்டாவது திருமணத்தில் நுழைவார்கள். தங்களின் ஆர்வம் மற்றும் விருப்பங்களுடன் ஒத்துப்போகும் ஒருவரை அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். தங்களின் ரசனைக்கு ஒத்துப்போகாத ஒருவருடன் அவர்கள் எப்போதும் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion