Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற மே மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
May 2025 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2025 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2025 மே மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதம் கலவையான பலன்களைத் தரும். இந்த மாதம் உங்கள் வீட்டை ஒழுங்கமைக்கவும், அலங்கரிக்கவும், புதுப்பிக்கவும் ஏற்றதாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு நல்லதாக இருக்கும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பெண்களைப் பொறுத்தவரை, இந்த மாதம் கூடுதல் விழிப்புணர்வு தேவை. எந்தப் பெண்ணையும் அவமரியாதை செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்தப் பெண்களுடனும் மோதல்களைத் தவிர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவார்கள். இருப்பினும், சில சூழ்நிலைகளில் உங்கள் சிந்தனையை விட உங்கள் இதயத்தை நம்புவதால், ஏமாறுதல் அல்லது இழப்புகளுக்கு வழிவகுக்கும். பெண்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் போது, கூடுதல் விழிப்புணர்வு தேவை. இம்மாதத்தில் தேவையற்ற கோபம் மற்றும் மோதலைத் தவிர்க்க வேண்டும்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது பற்றி யோசித்தாலும் அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றில் புதிதாக ஏதாவது முயற்சித்தாலும், இந்த மாதம் நல்ல பலனளிக்கும். சோம்பேறியாக இருப்பதைத் தவிர்ப்பது அவசியம். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், கவனக்குறைவாக இருக்காதீர்கள். திட்டமிட்டு வேலை செய்தால், முடிவுகள் சிறப்பாக இருக்கும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் மே மாதத்தில் கிடைக்கும். மாதத்தின் முதல் பாதியில். பெண்கள் தொடர்பான சிக்கல்களை சந்திக்கலாம். விலையுயர்ந்த பொருட்களைப் பெறுவதில் சிரமங்களும் ஏற்படலாம். இம்மாதத்தி எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெருப்பு அல்லது மின்சாரத்தைக் கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். வேலைகள் அல்லது உறவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் கோபம், மனக்கிளர்ச்சி மற்றும் அவசரத்தைத் தவிர்த்தால், நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதம் ஒரு புதிய தொழிலைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றைப் புதிய அணுகுமுறையில் எடுக்க சிறந்த மாதமாக இருக்கும். பொறுமையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டால் குடும்ப விஷயங்களிலும் நேர்மறையான பலன்களைத் தரும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் எவ்வளவு முயற்சி செய்தாலும் மிதமான வெற்றியைப் பெறுவீர்கள். உறவுகள் மேம்படும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழிலில் நேர்மறையான பலன்களை பெறக்கூடும். குடும்பத்தில் இதுவரை பிரச்சனைகள் இருந்தால், இம்மாதத்தில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். நிதி விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நிதானமாக வேலை செய்தால், சிறந்த பலன்களைப் பெறலாம். உறவுகளைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். நிதி ரீதியாக நேர்மறையான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், இந்த தடைகளைத் தாண்டிய பிறகு, திருப்திகரமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தனிப்பட்ட ஒழுக்கத்தைப் பேணுவது உங்களுக்கு நன்மை பயக்கும். இம்மாதத்தில் யாரையும் குருட்டுத்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். நிதி முடிவுகளை எடுக்கும்போது எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம். முடிந்தால், இந்த மாதம் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். உங்களை ஏமாற்ற பல முயற்சிக்கலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே மாதத்தில் வாழ்க்கையின் பல பகுதிகளில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சமநிலையில் செயல்பட்டால், வெற்றி பெறலாம். வேலைகளை சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் அணுகினால், முடிவுகளை சிறப்பாக பெறலாம். பணிகளில் சிறு மாற்றங்களை செய்ய நினைத்தால், கவனமாக செய்ய வேண்டும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், முடிவெடுக்கும் முன் நன்கு விசாரிக்க வேண்டும். பயணத்தை முறையாக திட்டமிட்டு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











