Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
ரிஷபம் செல்லும் செவ்வாய்: ஜூலையில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகுது...
Mars Transit In Taurus On July 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சிவபெருமானின் அம்சமான செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
செவ்வாய் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது இந்த செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை மாதத்தில் செவ்வாய் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் மற்றும் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இப்போது செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேப் போல் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். செவ்வாயின் செல்வாக்கு காரணமாக தலைமைத்துவ திறன்கள் மேம்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை, கௌரவம், புகழ் ஆகியவற்றைப் பெறக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்துடன் முன்னேற்றத்தையும் பெறுவார்கள். மேலும் வேறு சில தொழிலில் முதலீடுகளை செய்து நல்ல லாபத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். அதே சமயம் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். மேலும் புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களையும் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவமும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications