Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
99 ஆண்டுகளுக்கு பின் சூரியன், செவ்வாய், குருவின் அற்புத சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பணம் குவியப்போகுது..
Mars, Sun, Jupiter Combination After 99 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனான சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் தேவர்களின் குருவான குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இந்த செவ்வாய் பெயர்ச்சி சில ராசிக்கார்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.
ஏனெனில் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் சுப நிலைகளில் ஒன்றிணைந்து இருக்கின்றன. இந்நிகழ்வானது சுமார் 99 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது செவ்வாய், குரு, சூரியனின் சுப நிலைகளால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் சூரியனும், 2 ஆவது வீட்டில் குருவும், 3 ஆவது வீட்டில் செவ்வாயும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
சூரியனின் அருளால் பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பள்ளது. மாணவர்களுக்கும் இக்காலம் அருமையாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் இருந்து நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் குருவும், 5 ஆவது வீட்டில் சூரியனும், 6 ஆவது வீட்டில் செவ்வாயும் இருப்பதால், மகர ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும்.
வியாபாரிகள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்பினால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியனும், 8 ஆவது வீட்டில் குருவும், 9 ஆவது வீட்டில் செவ்வாயும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இதுவரை திருமணத்தில் சந்தித்த தடைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலை வலுவடையம். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மொத்தத்தில் வாழ்வில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications