Latest Updates
-
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்!
மகர சங்கராந்தியில் உங்க ராசிப்படி 'இத' தானம் செய்யுங்க.. சூரியனின் அருளால் ஆண்டு முழுவதும் செழிப்பா இருக்கும்
Makar Sankranti 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒளி, உயிர், ஆற்றல், அதிகாரம் ஆகியவற்றின் கடவுளாக வணங்கப்படுகிறார். 2026 ஆம் ஆண்டானது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாகும்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இப்படி மகர ராசிக்கு சூரியன் நுழையும் நாள் தான் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகர சங்கராந்தி ஜனவரி 14 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் தான் தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த மகர சங்கராந்தி நாளானழ சூரியனின் வடக்கு பயணத்தைக் குறிப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதையை திறக்கும். இந்நாளில் சூரிய பகவானை வணங்குவது மிகவும் நல்லது. இப்படி மனதார சூரிய பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதோடு இந்த நன்னாளில் தான தர்மங்களை செய்வது, கிரகங்களால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவி புரிந்து, வாழ்க்கையில் வளர்ச்சிக்கு உதவும். இருந்தாலும், இந்த மகர சங்கராந்தி நாளில் ஒருவர் தனது ராசிப்படி தானம் செய்வது இன்னும் சிறப்பான பலன்களைத் தரும். இப்போது மகர சங்கராந்தி நாளில் எந்த ராசிக்காரர்கள் எதை தானம் செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி நாளில் வெல்லத்தை தானம் செய்வது நல்லது. அதோடு சிவப்பு நிற ஆடைகள் அல்லது பொருட்களையும் தானம் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி நாளில் வெள்ளை நிற எள்ளு விதைகளை தானம் செய்யலாம். இதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். இது தவிர தயிரை கூட தானம் செய்யலாம்.
மிதுனம்
புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி நாளன்று போர்வை, கம்பளி போன்றவற்றை தானம் செய்யலாம். அதோடு பச்சை பயறையும் தானம் செய்வது நல்லது. இதன் மூலம் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் மற்றும் பேச்சாற்றலும் மேம்படும்.
கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி நாளில் அரிசியை தானம் செய்வது நல்லது. இது தவிர வெள்ளை நிற எள்ளையும் தானம் செய்யலாம். இதன் மூலம் சூரிய பகவான் மகிழ்ச்சி அடைந்து, தீய விளைவுகளில் இருந்து விடுபட உதவுவார்.
சிம்மம்
மகர சங்கராந்தி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானது. ஏனெனில் இந்த ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் மகர சங்கராந்தி நாளில் எள்ளு, வெல்லம் போன்றவற்றை தானம் செய்யலாம். இது வாழ்க்கையில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.
கன்னி
புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் மகர சங்கராந்தி நாளில் பச்சை நிற பொருட்களை தானம் செய்வது நல்லது. அதுவும் பச்சை நிற ஆடைகள், காய்கறிகள் அல்லது பிற பச்சை நிற பொருட்களை தானம் செய்யலாம். இது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இது தவிர இவர்கள் இந்நாளில் சூரியன் மற்றும் விநாயகரை வழிபடுவது நல்லது.
துலாம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் மகர சங்கராந்தி நாளில் வெள்ளை நிற பொருட்களான அரிசி, சர்க்கரை அல்லது ஆடைகளை தானம் செய்யலாம். இது சமூகத்தில் செல்வாக்கை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் மகர சங்கராந்தி நாளில் வெல்லம், எள்ளு, தானியங்களை தானம் செய்வது நல்லது. மேலும் சிவப்பு நிற பொருட்களையும் தானம் செய்யலாம். இது எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதோடு, அச்சமற்றவராக்கும்.
தனுசு
குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் நிற பழங்கள், ஆடைகள் மற்றும் பருப்பு வகைகளை தானம் செய்யலாம். இது தவிர மஞ்சளையும் தானம் செய்யலாம். இது ஜாதகத்தில் உள்ள குரு பகவானின் நிலையை வலுப்படுத்துவதோடு, முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் வழங்கும்.
மகரம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த மகர சங்கராந்தி மிகவும் சிறப்பானது. ஏனெனில் சூரியன் இந்நாளில் தான் மகர ராசிக்குள் நுழைகிறார். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் கருப்பு எள்ளு, கருப்பு நிற ஆடைகளை தானம் செய்வது மிகவும் மங்களகரமானது. இதனால் சனி பகவான் மகிழ்ச்சி அடைந்து, சகல நன்மைகளையும் பெற வழிவகை செய்வார்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவானாவார். எனவே இந்த ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி நாளில் வெல்லத்தை தானம் செய்வது நல்லது. இது நல்ல அதிர்ஷ்டத்தையும், நோய்களிலிருந்து விடுபடவும் செய்யும் என்று நம்பப்படுகிறது.
மீனம்
குரு பகவானை அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி நாளில் கொண்டைக்கடலை, அரிசி போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இது தவிர எள்ளு விதைகளையும் தானம் செய்யலாம். இதன் மூலம் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications