செப்டம்பரில் நிகழும் ஆண்டின் 2-வது சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்...

Lunar Eclipse On 18 September 2024: கிரகணங்களானது வானில் நிகழும் அரிய நிகழ்வுகளாகும். ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். அந்த வகையில் இந்த ஆண்டில் ஏற்கனவே 1 சூரிய கிரகணமும், 1 சந்திர கிரகணமும் நிகழ்ந்துவிட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி பௌர்ணமி நாளில் நிகழவுள்ளது. அதுவும் இந்த சந்திர கிரகணமானது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். இந்நாளில் சந்திரன் வழக்கத்தை விட பிரகாசமாக இருக்கும்.

Lunar Eclipse On 18 September 2024 People Of These Zodiac Signs Should Be Careful

ஆனால் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஏனெனில் இது இந்திய நேரப்படி செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 6.11 மணிக்கு தொடங்கி காலை 10.17 மணிக்கு முடிவடையும். இதனால் இந்தியாவில் சூதக் காலம் செல்லாது.

ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வருகிற சந்திர கிரகணமானது சிறப்பாக இருக்காது. குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பேச்சால் பல சச்சரவுகளில் சிக்குவீர்கள். விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மன உளைச்சலால் அவதிப்படுவீர்கள். உங்களின் எந்த திட்டங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது சற்று மோசமாக இருக்கும். முக்கியமான வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க இக்காலம் சிறந்தது அல்ல. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் மற்றும் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமானது சிறப்பாக இருக்காது. ஆரோக்கிய விஷயத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் பெரிய மருத்துவ செலவை வைத்துவிடும். யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அதே சமயம் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். மோசமான தாக்கத்தைத் தவிர்க்க இந்த ராசிக்காரர்கள் மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, September 12, 2024, 19:15 [IST]
Desktop Bottom Promotion