Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Lunar Eclipse 2024: ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
Lunar Eclipse On 18 September 2024: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த வானியல் நிகழ்வானது பித்ரு பட்சத்தின் தொடக்கத்தில் நிகழ்வதால், ஜோதிடத்ன் படி இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இந்த கிரகணம் ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருந்தாலும், இது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்படியான நிலையில், இந்த இரண்டாவது சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், யாருக்கு நன்றாக இருக்கும் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உறவுகளில் பெரிய மாற்றங்களைக் காணலாம். அதுவும் சூழ்நிலையைப் பொறுத்து, அந்நபருடனான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். உங்களின் உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டு, உறவுகளை முறிக்கும் சூழலும் உருவாகலாம். இந்நிலையில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீர் பண வரவு ஏற்படலாம். காதல் வாழ்க்கை மேம்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இதுவரை திருமணமாகாதவர்கள் தங்கள் திருமணத்தில் சந்தித்து வந்த தடைகள் நீங்கி, நல்ல வரன் கிடைக்கும். காதலித்து வந்தால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். இருப்பினும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் தொழிலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணிபுரிந்து வருபவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட முடிவெடுக்கலாம். இருந்தாலும், இப்படியான முடிவை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக பாதித்துவிடும். எனவே எந்த முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் சிறப்பான பலன்களைத் தரும். இக்காலகட்டத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இந்த கிரகணம் தொழில் வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவடையும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல பலன் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது சற்று மோசமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பெரிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பிரிவு ஏற்படலாம். பணியிடத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு தொந்தரவு அளிக்கலாம். எனவே இப்படியான சூழ்நிலையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது மிகவும் நன்றாக இருக்கும். வியாபாரம் மற்றும் காதல் தொடர்பான விஷயங்கள் அருமையாக இருக்கும். வெற்றிகள் குவியும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமும் மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நிதி நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் போகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமானது வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையால் சிக்கி அவதிப்படுவீர்கள். பணப் பலன்களைப் பெற நீங்கள் எந்த வேலைகளைச் செய்தாலும், அவை அனைத்தும் நல்ல வெற்றியைப் பெறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நன்றாக இருக்கும். கிரகணம் முடிந்த பின் பெரிய நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாக முடிவடையும். முக்கியமாக நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications