Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
சனி பகவானின் ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இன்று இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்..
Lunar Eclipse 2025: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியும். இதனால் சூதக் காலமும் செல்லுபடியாகும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் இரவு 9.58 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது.
பொதுவாக சூதக் காலமானது கிரகணம் தொடங்குவதற்கு 9 மணிநேரத்திற்கு முன்பு தொடங்கும். எனவே சூதக் காலம் செப்டம்பர் 07 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தொடங்கும். இக்காலத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்படும். முக்கியமாக இந்த சந்திர கிரகணத்தை இரத்த நிலவு என்றும் அழைப்பர். ஏனெனில் சந்திரன் சிவப்பு நிறத்தில் சுமார் 82 நிமிடங்கள் நீடித்திருக்கப் போகிறது.

மேலும் இந்த சந்திர கிரகணம் சனி பகவானின் கும்ப ராசியில் நிகழவுள்ளது. சனி பகவானின் ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது. முக்கியமாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். பல ஆண்டுகள் கழித்து இந்தியாவில் தெரியக்கூடிய சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. பண வரவில் நல்ல உயர்வு ஏற்படும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, தம்பதிகளிடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இருப்பினும் செலவுகளும் சற்று அதிகரிக்கலாம். ஆனால் எந்த செலவையும் சற்று புத்திசாலித்தனமாக செலவிட அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணத்தால் தொழில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலையை வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணத்தால் தங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நீண்ட காலமாக இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எடுக்கும் வேலைகளில் வெற்றியைப் பெறுவீர்கள். சனி பகவானின் ஆசியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications