Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கிருஷ்ணனுக்கு இந்த 3 ராசிக்காரங்களை தான் ரொம்ப பிடிக்குமாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Lord Krishna Favourite Zodiac Signs In Tamil: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ராசியும் ஏதாவது ஒரு கிரகம் அல்லது தெய்வத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. அதில் காக்கும் கடவுளாக கருதப்படுபவர் விஷ்ணு. இந்த விஷ்ணுவின் 10 அவதாரங்களுள் எட்டாவது அவதாரம் தான் கிருஷ்ணர். இந்த கிருஷ்ணரின் பிறந்த நாள் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு தேய்பிறை அஷ்டமி ஒரு நாளிலும், ரோகிணி நட்சத்திரம் ஒரு நாளிலும் வருவதால், கிருஷ்ண ஜெயந்தியை ஆகஸ்ட் 16 மற்றும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் கொண்டாடலாம்.

இப்படிப்பட்ட கிருஷ்ண பகவானின் அருள் அனைவரது மீது இருந்தாலும், சில ராசிக்காரர்கள் பிறவியில் இருந்து கிருஷ்ணரின் பரிபூர்ண ஆசியை பெற்றுள்ளனர். இப்போது பிறவியில் இருந்தே கிருஷ்ணரின் ஆசியைப் பெற்ற ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் சிறப்பான ஆசியைப் பெற்றவர்கள். ஏனெனில் இந்த ராசியில் தான் கிருஷ்ணர் பிறந்த ரோகிணி நட்சத்திரம் வருகிறது. எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் பிறவியில் இருந்தே பகவான் விஷ்ணுவின் சிறப்பு ஆசிகளை பெற்றவர்களாவர். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் எந்த துறையில் இருந்தாலும், சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். கிருஷ்ணரின் மந்திரத்தை இவர்கள் பாராயணம் செய்தால், இவர்களுக்கு ஒருபோதும் பணப்பிரச்சனையே வராது மற்றும் இவர்களின் உடல் மற்றும் மன அழுத்தமும் நீங்கும். இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது.
மீனம்
மீன ராசிக்காரர்களும் பகவான் விஷ்ணுவின் சிறப்பான ஆசியைப் பெற்றவர்களாவர். கிருஷ்ணரின் பரிபூர்ண அருளைப் பெற்றிருப்பதால், வாழ்க்கையில் அனைத்துவிதமான சந்தோஷத்தையும் பெறுவார்கள். கிருஷ்ணரின் ஆசி இருப்பதால், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களும் கிருஷ்ணரின் விருப்பமான ராசிக்காரர்களாவர். இவர்களும் பிறவியில் இருந்தே கிருஷ்ண பகவானின் ஆசியைப் பெற்றவர்கள். ஏனெனில் இந்த ராசியின் அதிபதி குரு பகவான் மற்றும் விஷ்ணு பகவானாவர். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் உண்மை மற்றும் நீதியுடன் தொடர்புடையவர்கள். இவர்களுக்கு கண்ணனின் சிறப்பான ஆசி இருப்பதால், இவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மிகுந்த மரியாதையும், வாழ்க்கையில் நல்ல பொருள் இன்பங்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications