Latest Updates
-
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
செப்டம்பரில் நிகழும் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Last Solar Eclipse On 21 September 2025: கிரகணங்கள் என்பவை ஒரு வானியல் நிகழ்வுகளாகும். ஜோதிடத்தின் படி, கிரகணங்கள் ஒரு மோசமான நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என 4 முறை கிரகணங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 ஆம் தேதி நிகழ்ந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகணமானது இரவு 11 மணிக்கு தொடங்கி, அதிகாவை 3.23 மணி வரை நீடித்திருக்கும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால் இந்த கிரகணம் நியூசிலாந்து, பிஜி, அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நன்கு தெரியும்.

ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தின் போது சூரியன் கன்னி ராசியில் இருப்பார். மேலும் இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். நம்பிக்கையான ஒருவர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. எனவே யாரையும் நம்பாதீர்கள். உங்களின் மன தைரியம் குறைந்து, மனதளவில் பலவீனமாக இருப்பீர்கள். பண பிரச்சனைகளும் திடீரென்று தலைத்தூக்கும். ஆரோக்கியமும் பலவீனமாகும். இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் சற்று கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருந்தால், மோசமான பாதிப்பை தவிர்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் இந்த சூரிய கிரகணம் நிகழவுள்ளதால், கன்னி ராசிக்காரர்கள் பல சவால்களை எதிர்கொள்வார்கள். வணிகம், காதல் வாழ்க்கை, நிதி நிலை போன்றவற்றில் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் எவரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவையும் எடுப்பதில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஆண்டின் இரண்டாம் சூரிய கிரகணத்தின் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நிதி தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். முதலீடுகளால் இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நம்பிக்கையான மற்றும் நெருக்கமான ஒருவர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. எனவே மூன்றாம் நபரிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் மோசமான விளைவுகளைத் தவிர்க்க பொறுமையுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications