Latest Updates
-
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா?
கடக ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை பொழிய போகுது..
Lakshmi Narayan Yog In Cancer 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராசி மாற்றங்களால் சுப யோகங்கள் அவ்வப்போது உருவாகும் அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ராஜயோகங்கள் உருவாகும் போது, அது ஒருவரது பொருள் இன்பங்களை அதிகரிப்பதோடு, நிதி நிலையை வலுப்படுத்தும்.
அந்த வகையில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகக்கூடிய யோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த ராஜயோகமானது ஜூலை மாதத்தில் கடக ராசியில் உருவாகவுள்ளது. இந்த மங்களகரமான ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டமாக இருக்கும். செல்வ நிலையில் உயர்வு ஏற்படும். இப்போது கடக ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டங்கள் நல்ல வெற்றி அடையும். மேலும் இந்த யோக காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். ஆளுமை மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந் ரசிக்காரர்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதோடு பணத்தை சேமிக்கவும் முடிவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய வணிகத்தை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தி, தங்களின் இலக்கை அடைவார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த யோக காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபராக இருந்தால், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications