கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்க ராசிக்கு ஏற்ப கிருஷ்ணரை வழிபடுங்க.. உங்க ஆசைகள் நிறைவேறும்.. மகிழ்ச்சி பெருகும்..

Krishna Jayanthi 2025: மூம்மூர்த்திகளுள் காக்கும் தொழிலை செய்பவர் தான் விஷ்ணு. இந்த விஷ்ணு பகவானின் 8 ஆவது அவதாரம் தான் கிருஷ்ண பகவான். கம்சனை அழிக்க அவதாரம் எடுத்த கிருஷ்ண பகவான் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.

பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியாக மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, அதாவது இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குழந்தை வடிவமான கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து, அவரை மக்கள் வழிபடுவார்கள்.

Krishna Jayanthi 2025 What To Offer To Lord Krishna According To Zodiac Signs

ஆனால் ஜோதிடத்தின் படி, கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் அவர்களது ராசிக்கு ஏற்றவாறு கிருஷ்ண பகவானை வழிபாடு செய்து வந்தால், கிருஷ்ணரின் அருள் கிடைப்பதோடு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். இப்போது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களும் கிருஷ்ணரை எப்படி வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் அதிகாலையில் குளித்த பின் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, கிருஷ்ணருக்கு சிவப்பு நிற பூக்கள் மற்றும் சர்க்கரை மிட்டாயை படைத்து வழிபடுவது நல்லது. அதோடு "ஓம் க்ளீம் கிருஷ்ணாய நமஹ" என்னும் கிருஷ்ணரின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ண பகவானுக்கு வெண்ணெய் மற்றும் சர்க்கரையை படைத்து வழிபாடு செய்வது நல்லது. அதோடு இந்நாளில் கிருஷ்ண அஷ்டகம் அல்லது கோவிந்தாஷ்டகத்தை பாராயணம் செய்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பச்சை நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ணருக்கு துளசி இலைகள் மற்றும் மஞ்சள் நிற பூக்களைப் படைத்து வழிபடுவது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் மாலை வேளையில் கிருஷ்ணருக்கு முன் ஒரு விளக்கேற்றி, மனதில் உள்ள ஆசைகளைச் சொல்லி வழிபாடு செய்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ண பகவானுக்கு குங்குமப்பூ கலந்த பால் மற்றும் வெண்ணெயை படைத்து வழிபடுவது நல்லது. மேலும் இந்த ராசியை சேர்ந்தவர்கள் இரவு 11 விளக்குகளை ஏற்றி கிருஷ்ண மந்திரத்தை கூறி வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ண பகவானுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் "ஓம் கோவிந்தாய நம" என்று 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பச்சை நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை நெய் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து, பச்சை நிற பொருட்களையும், உலர் பழங்கள், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை படைத்து வழிபடுவது நல்லது.

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் ராதா கிருஷ்ணரை பால் மற்றும் தேனால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்வது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு முன் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து பால், சர்க்கரை, தேன், தயிர் மற்றும் தண்ணீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு சிவப்பு நிற பலகாரங்களை படைத்து வழிபடுவது நல்லது. அதோடு கிருஷ்ணரின் சிறப்பு மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

தனுசு

தனுசு ராசியை சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பால் மற்றும் தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் மஞ்சள் நிற இனிப்புக்களை படைத்து வழிபாடு செய்வது நல்லது. அதோடு இவர்கள் ஸ்ரீமத் பகவத் கீரையின் 12 ஆவது அத்தியாயத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பழுப்பு அல்லது நீல நிற ஆடைகளை அணிந்து கங்கை நீரால் அபிஷேகம் செய்து, கருப்பு எள்ளு உருண்டை மற்றும் வெல்லத்தை படைத்து வழிபட வேண்டும். அதோடு ஏழை எளியோருக்கு தானம் செய்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசியை சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பழுப்பு அல்லது நீல நிற ஆடைகளை அணிந்து தேன், பால், தயிர், சர்க்கரை மற்றும் தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற பலகாரங்கள் மற்றும் வெள்ளை நிற பூக்களை படைத்து வழிபடுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் மஞ்சுள் நிற ஆடைகளை அணிந்து, துளசி இலைகள் மற்றும் மஞ்சள் நிற பூக்கள் மற்றும் பலகாரங்களை படைத்து வழிபடுவது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் "ஓம் வாசுதேவாய நமஹ" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, August 16, 2025, 10:12 [IST]
Desktop Bottom Promotion