Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களை பணக்காரராக்கும் அதிர்ஷ்ட பொருள் எது-ன்னு சொல்றோம்..
Numerology: நமது வாழ்க்கையில் எண்கள் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த எண்களை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணங்கள் போன்ற பலவற்றை அறியலாம். ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களைப் போல், எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகிறது.
நீங்கள் உங்களின் விதி எண்ணை அறிந்து கொள்ள விரும்பினால், உங்கள் பிறந்த தேதியின் கூட்டு தொகையின் ஒற்றை இலக்க எண்ணைக் கணக்கிடுங்கள். அதாவது நீங்கள் 25 ஆம் தேதி பிறந்ததால், உங்களின் விதி எண் 2+5=7 ஆகும். இந்த விதி எண்கள் அந்த தேதியில் பிறந்தவர்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரியப்படுத்தும்.

அதுவும் நீங்கள் உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க விரும்பினால் மற்றும் பணக்காரர் ஆக வேண்டுமென்று விரும்பினால், உங்கள் பிறந்த தேதிக்குரிய அதிர்ஷ்ட பொருட்களை உங்களுடன் எப்போதும் வைத்திருங்கள். இதனால் அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதோடு, வெற்றியும், செல்வமும் குவியும்.
இப்படி ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும், பணக்காரராகவும் பிறந்த தேதிப்படி ஒருவர் எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து எண் கணித நிபுணர் சுவேதா சுரேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணின் அதிபதி சூரியன். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய செல்வத்தை பெறவும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் இருக்க தங்க நகைகள் அல்லது செம்பு நாணயத்தை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வெள்ளி ஆபரணங்கள் அல்லது வெள்ளி நாணயத்தை எப்போதும் தங்களுடன் வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் எப்போதும் ஆதரவாக இருக்கும்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த எண்ணின் அதிபதி குரு பகவான். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குளிக்க வேண்டும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணின் அதிபதி கேது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்திற்கு எப்போதும் தங்களின் பர்ஸ் அல்லது பணப் பையில் 4 மிளகை வைத்திருப்பது நல்லது.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணின் அதிபதி புதன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் கையி அதிகம் குவிய விரும்பினால், 5 ஏலக்காயை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செல்வம் பெருகவும், அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கவும், 2 சிறிய துண்டு பட்டையை பணம் வைக்கும் பையில் வைத்திருப்பது நல்லது.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த எண்ணின் அதிபதி கேது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மெட்டல் ஸ்ட்ராப் வாட்ச்சை அணிவது, அவர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து, விரைவில் செல்வந்தராக்கும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணின் அதிபதி சனி பகவான். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மயில் இறகை தங்களைச் சுற்றி வைத்திருந்தால் அல்லது எப்போதும் பர்ஸில் ஒரு மயில் இறகை வைத்து கொண்டிருப்பது மிகவும் நல்லது.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தையும், பணத்தையும் ஈர்க்க, குங்குமப்பூவை தங்கள் பர்ஸில் வைத்திருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications