Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
குரு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் ஆகஸ்ட் வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Jupiter Transit In Rohini Nakshatra On 13 June 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் மகிழ்ச்சி, செழிப்பு, மரியாதை ஆகியவற்றின் காரணியாவார். இந்த குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குரு பகவான் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் குரு பகவான் ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருப்பார். சந்திரனின் நட்சத்திரத்தில் குரு நுழைவதால், அதன் தாக்கம் சற்று சிறப்பாக இருக்கும்.

அதில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது ரோகிணி நட்சத்திரத்திற்கு குரு பகவான் செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர மாற்றமானது நல்ல பலன்களை வழங்கும். வேலையில் உங்கள் ஆர்வத்தில் பெரிய மாற்றங்களைக் காணக்கூடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். புதிய தொழிலைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்குவது நல்லது. முதலீடுகளை செய்ய நினைத்தால், அதற்கும் இக்காலம் உகந்தது.
முதலீடுகளால் உடனே நல்ல பலனைப் பெறாவிட்டாலும், எதிர்காலத்தில் நினைக்காத அளவில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நிறைவேறும். சொந்த வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் பணியிடத்தில் சற்று கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களை வழங்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குருவின் 5 ஆம் பார்வை விழுவதால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் நிறைய அலைச்சலை சந்திப்பீர்கள். இருப்பினும் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியானது பலவிதமான நன்மைகளை அளிக்கும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால், வேலையில் நல்ல கவனத்தை செலுத்தி, சிறப்பாக செயல்பட முடியும். இதன் விளைவாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிதி நிலை வழக்கத்தை விட நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications