Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Gajkesari Rajyog On 02 July 2024: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ராசியை மாற்றும் போது, சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமான அனைத்து ராசிகளிலு காணப்படும். அந்த வகையில் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூலை 02 ஆம் தேதி சந்திரன் ரிஷப ராசிக்குள் நுழைந்து, குருவுடன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரனின் ராசியில் கஜகேசரி ராஜயோகம் உருவாவதால், அனைத்து ராசிகளிலுமே இதன் காணப்படும்.

முக்கியமாக இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைப்பதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும். இப்போது ரிஷப ராசியில் உருவாகவுள்ள கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில், வியாபாரம் இரண்டிலும் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய நபர்களின் உறவுகள் கிடைக்கும் மற்றும் இது எதிர்காலத்தில் நல்ல நன்மைகளை வழங்குவதாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். மேலும் நிறைய பணத்தை சம்பாதிப்பதைத் தவிர, பணத்தை சேமிக்கவும் முடியும். இதன் விளைவாக நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுவடையும். எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். புத்திசாலித்தனத்தால் பல முக்கியமான காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். உங்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும். இது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications