Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.
Jupiter Moon Make Gajkesari Rajyog 2024: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். தற்போது இந்த குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். கிரகங்களில் சனிக்கு அடுத்தப்படியாக மெதுவாக நகரும் கிரகம் என்றால் அது வியாழன் என்னும் குரு.
எனவே குருவின் நிலைகளில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும். அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதோடு குரு பகவான் மற்ற கிரகங்களுடன் இணையும் போது பலவிதமான சுப யோகங்கள் உருவாகும். அதில் குரு பகவான் சந்திரனுடன் இணையும் போது உருவாகக்கூடிய யோகம் தான் கஜகேசரி ராஜயோகம்.

இந்த கஜகேசரி ராஜயோகமானது குருவுடன் சந்திரன் ஒன்றிணைந்து பயணிப்பதால் மட்டும் உருவாவது அல்ல, சந்திரன் எந்த ராசியில் நுழைகிறதோ, அந்த ராசியில் குரு சுபத்துவம் பெற்றிருந்தால், இந்த ராஜயோகம் உருவாகும். அந்த வகையில் ஜூன் 14 ஆம் தேதி கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.
அதுவும் சந்திரன் ஜூன் 14 ஆம் தேதி கன்னி ராயில் நுழைகிறார். இந்த ராசியில் ஜூன் 16 ஆம் தேதி வரை இருப்பார். இந்நிலையில் குருவின் 5 ஆம் அம்சம் சந்திரன் மீது விழுவதால் இந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கஜகேசரி ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலையை புதிய உத்வேகத்துடன் செய்வீர்கள். வேலையில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இதுவரை தொழில் தொடர்பான குழப்பங்களை கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் அந்த குழப்பங்கள் நீங்கி நல்ல முடிவை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.
கஜகேசரி யோக காலத்தில் ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடங்கினால் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம். சிலருக்கு நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கும்.
மிதுனம்
கஜகேசரி ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவதோடு, நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும்.
உங்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் மற்றும் வீட்டில் உள்ளோருடன் நல்லுறவு இருக்கும். தொழில் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
தனுசு
கஜகேசரி ராஜயோகமானது தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பொருள் இன்பத்தைத் தரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் புதிய வேலைகளைத் தொடங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரமும் செழிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications