Latest Updates
-
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது!
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் நிகழும் குரு செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்ட போகுது..
Jupiter Mars Conjunction In Taurus 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களும், கிரக சேர்க்கைகளும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நட்பு கிரகங்கள் ஒன்றிணையும் போது, அதன் விளைவாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
தற்போது இந்த குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் ரிஷப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பின் ரிஷப ராசியில் உருவாகவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது அதிர்ஷ்டமானதாக, நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் புகழும், மதிப்பும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதனால் நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்லாம். தந்தையுடனான உறவு வலுவடையும். காவல் துறை, ராணுவம், விளையாட்டுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications