Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க.. ஜூன் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
June 2025 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2025 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2025 ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதம் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆனால் ஒரே நேரத்தில் பல திட்டங்களை போடுவதால் பிரச்சனைகள் அதிகரிக்கும். எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் கவனமாக படிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் உறவில் பரஸ்பர அன்பு வலுவடையும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உணர்ச்சி ரீதியாக கடினமாக இருக்கும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவரிடமிருந்து நிதி உதவியைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். மாத இறுதியில் பேச்சுவார்த்தை மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். நிதி ரீதியாக படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். செல்வம் பெருகும். பணியிடத்தில் ஒருவித தனிமையை உணர்வதால், பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். ஜூன் மாதத்தில் நீதிமன்ற வழக்குகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மாத இறுதியில், சூழ்நிலைகள் சிறப்பாக மாறும்
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்களின் திட்டங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான பலன்களைத் தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இம்மாதத்தில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு நல்ல பலனைத் தரும். ஆனால் மாத இறுதியில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி மனம் கவலைப்படும். எப்போதும் தனியாக சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதமானது நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். முதலீடுகள் நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். காதல் உறவில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இம்மாதத்தில் சமநிலையைப் பேணி வந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதம் ஒரு அழகான மாதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். உங்களுக்கு எங்கிருந்தோ நிதி உதவி கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணம் தொடர்பான பயணங்கள் இனிமையாக இருக்கும். ஜூன் மாத இறுதிக்குள், வாழ்க்கையில் பல மாற்றங்களை காணக்கூடும். மொத்தத்தில் இம்மாதம் சாதகமாக இருக்கும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜூன் மாதத்தில் நிதி உதவி கிடைக்கும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். காதலர்களிடையே அல்லது தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஜூன் மாத இறுதியில், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் காண்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் உறவு வலுவடையும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உயர் அதிகாரிகள் அதிகமாக செலுத்துவார். இதனால் எந்த கவலையும் இல்லாமல் வேலை செய்ய முடியாது. நிதி விஷயங்களில் முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். ஜூன் மாத இறுதிக்குள், நிலைமை படிப்படியாக மேம்படும், மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நிதி விஷயங்களில் எந்தவொரு புதிய முதலீடும் செலவுகளை அதிகரிக்கக்கூடும், எனவே இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஜூன் மாத இறுதிக்குள் பல சூழ்நிலைகள் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications