Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
July Month Rasi Palan 2024: ஜூலை மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது...
July Month Rasi Palan 2024: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஜூலை மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.
உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜூலை மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூலை மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2024 ஜூலை மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணியிடத்தில் வேலைப்பளுவால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இருப்பினும், ஒவ்வொரு சவாலையும் முழு தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள் மற்றும் அவற்றை எளிதில் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உறவுகளில் அன்பும் இனிமையும் அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். சிந்தித்து எந்த முடிவையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில்லாமல் இருந்தால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெறுவீர்கள். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தால், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக உணருவீர்கள்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். பரம்பரை தொழிலை செய்து கடினமாக உழைத்து, சொந்த அடையாளத்தை உருவாக்குவதில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலையை மாற்ற விரும்பினால், நீங்கள் சில நல்ல சலுகைகளைப் பெறக்கூடும். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காணலாம். உங்கள் நிதி நிலை மேம்படும் மற்றும் பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். இம்மாதத்தில் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டால், இந்த மாதத்தில் நிவாரணம் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். சில காலமாக வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்திருந்தால், இந்த மாதம் நீங்கள் அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் வணிகம் வேகமாக முன்னேறும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் அதிக மன அழுத்தத்தை உணர்வீர்கள். இருப்பினுமம் நேர்மறையாக இருக்க வேண்டும். ஏனெனில் கடின உழைப்பின் சரியான முடிவுகளை விரைவில் பெறுவீர்கள். வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள். மாத இறுதியில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எங்காவது வெளியே செல்லலாம். இருப்பினும், பயணத்தின் போது உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுப்பெறும். உயர் அதிகாரிகள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தொழிலதிபர்கள் சில பெரிய சவால்களை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் அதை எளிதில் சமாளிப்பார்கள். முதலீடுகளை செய்ய சிறந்த மாதம். வீட்டில் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும், ஆனால் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் போதுமான நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையிடம் ஏதேனும் வாக்குறுதி அளித்திருந்தால் அதை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். திருமணமாகாதவராகவும், விரும்பிய வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களாகவும் இருந்தால், நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்கள் தோல்விக்கு மற்றவர்களை குறை கூறாமல், உங்கள் தவறை அறிந்து அவற்றை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். காதலைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். விடாமுயற்சியுடன் படித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பணத்தைப் பொறுத்தவரை, ஜூலை மாதம் உங்களுக்கு சுமாராக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க, நீங்கள் சரியான உணவை சாப்பிடுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்படும். முதலீடுகள் போன்றவற்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால் விரும்பிய வேலையை பெறலாம். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் ஆக்ரோஷமான குணம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். விரைவில் வெற்றி பெற எந்த குறுக்கு வழியையும் பின்பற்றுவதை தவிர்க்கவும். வெற்றிக்கான திறவுகோல் கடின உழைப்பு மட்டுமே, எனவே நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளுவை சந்திக்கலாம். இம்மாதத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். இந்த மாதம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இம்மாதத்தில் அதிகப்படியான கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். வியாபாரிகளுக்கு புதிய தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இம்மாதத்தில் கூட்டு தொழில் செய்வது பயனுள்ளதாக இருக்கும். முதலீடுகள் செய்ய உகந்த மாதம். வீட்டில் சூழல் திருப்திகரமாக இருக்கும். உங்கள் இன்ப துன்பம் அனைத்திலும் துணை ஆதரவாக இருப்பார். பெற்றோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். பொருளாதார நிலை வலுப்பெறும். வசதிகள் பெருகும். இந்த மாதத்தில், உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்,
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது வேலையைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். நீங்கள் எந்த வகையான மாற்றத்தையும் திட்டமிட்டால், இந்த மாதத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். வேலை செய்பவர்களின் உழைப்பும் திறமையும் பெரிதும் பாராட்டப்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் காதல் திருமணமாக மாறலாம். பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எதிர்மறையாக உணர்வீர்கள், உங்கள் தன்னம்பிக்கை குறையும். சிந்திக்காமல் எந்த நடவடிக்கையும் எடுத்தால், உங்கள் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் செலவுகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இம்மாதத்தில் வேலையில் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும். நேர்மறையுடன் கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை செய்தால், பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் பல சிறிய லாபத்தைப் பெறலாம். உங்கள் வியாபாரம் வளரும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நீங்கள் திடீரென்று ஒரு புதிய வருமானத்தை பெறலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சில காலமாக சரியில்லாமல் இருந்தால், இம்மாதத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உண்ணும் உணவில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











