Latest Updates
-
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும்
ஜூலை மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Career Horoscope For July 2024 In Tamil: 2024 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதத்தில் நுழைந்துவிட்டோம். கிரகங்களின் நிலைகளால் இம்மாதமானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதுவும் இம்மாதத்தில் புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் இந்த ஜூலை மாதம் குறித்து பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள்.
ஜூலை மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறுவார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 12 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இம்மாதம் தொழிலுப்காக முயற்சிப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்படி கடினமாக உழைத்தால், உங்கள் விதி மாற வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பணியிடத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இதன் விளைவாக உங்கள் வேலை பாதிக்கப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது தொழில் ரீதியாக நன்றாக இருக்காது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது என்பது தாமதமாகும். இருப்பினும் முயற்சிகளை கைவிடக்கூடாது. இம்மாதத்தில் எதிர்மறை எண்ணங்களை மனதில் நுழைய விடாதீர்கள். இம்மாதத்தில் தொழிலில் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். நிறைய கடின உழைப்பு தேவைப்படும். விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவதன் மூலம், வேலையில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூலை மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்காது. எதிர்மறை எண்ணங்கள் இம்மாதத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் வளர விடாதீர்கள். முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்தால், நல்ல வெற்றியை வரும் காலத்தில் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் எடுக்கும் தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களின் நடத்தை உயர் அதிகாரிகளை மகிழ்விக்கும். இதன் காரணமாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலையில் உங்களின் அர்ப்பணிப்பானது நல்ல முன்னேற்றத்தைத் தரும். மொத்தத்தில் தொழில் ரீதியாக, இம்மாதம் அருமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூலை மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அரசு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் ஒரு சிறப்பு வழிகாட்டி ஒருவரின் நட்பால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூலை மாதம் தொழிலைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். இம்மாதத்தில் உங்களுக்கு பிடித்த வேலையை பெறுவீர்கள். விரும்பிய வேலை கிடைப்பதால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூலை மாதம் தொழிலைப் பொறுத்தவரை சற்று கவலை அளிப்பதாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்றவாறு பணியிடத்தில் உங்களால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். மனச்சோர்வில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதம் தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர்அதிகாரிகளுடன் நல்லுறவு உருவாகும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூலை மாதம் தொழிலைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் வெற்றி பெற நிறைய பேராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் வெற்றிக்காக கடினமாக உழைப்பது பிற்காலத்தில் நல்ல பலனைத் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்து, வேலையை பெற்றிருந்தால் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவால் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் அவசரமாக எடுக்கும் எந்த தவறான முடிவும், உங்கள் கடின உழைப்பை அழித்துவிடும். எனவே எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு, தொழிலில் நேர்மறை எண்ணங்களுடன் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications