Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
July 2025 Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நரகத்தை விட மிகவும் மோசமானதாக இருக்குமாம்...
July 2025 Monthly Horoscope: 2025 தொடங்கி கண்ணை மூடி திறப்பதற்குள் பாதி வருடம் முடிந்து விட்டது. ஒவ்வொரு புதிய மாதமும் சில வாய்ப்புகளையும், சில மாற்றங்களையும் அனைவருக்கும் உறுதி செய்கிறது. அது எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பது அவர்களின் ராசியைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
ஜூலை மாதம் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் மாதமாக இருக்கப்போகிறது. ஆனால் சில ராசிக்காரர்கள் அதற்கு நேர்மாறாக பாதகமான விளைவுகளையும், சவால்களையும் சந்திக்கப் போகிறார்கள். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சவாலானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, உங்களையோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரையோ பாதிக்கக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருப்பவர்கள் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம், மேலும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் சில பதட்டமான சூழல் நிலவலாம், சொத்து தொடர்பாக குடும்பத்திற்குள் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
தனிப்பட்ட உறவுகளில் சில சிக்கல்கள் ஏற்படலாம், இழப்புகள், நம்பிக்கை துரோகங்கள் மற்றும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகிச் செல்வது போன்றவற்றால் கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் இந்த மாதம் மிகவும் சவாலான மற்றும் கடினமான மாதமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்கள் நிறைந்த மாதமாக இருக்கும். குடும்பத்தினருக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் கவலையையும், கடன் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும், எனவே தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வாக்குவாதங்களால் குடும்பத்தில் வேறுபாடுகள் ஏற்படக்கூடும், மேலும் வேலையில் சக ஊழியர்கள் துரோகம் செய்ய வாய்ப்புள்ளது.
கடந்த கால முதலீடுகள் இப்போது ஓரளவு பலன் தரக்கூடும். நெருங்கிய ஒருவரால் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த மாதம் கவலைகளும், வாய்ப்புகளும் நிறைந்த மாதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிக்கல்கள் நிறைந்த மாதமாக இருக்கும். கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகளிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், குடும்பத்தில் சில பதட்டமான சூழல் நிலவக்கூடும், மேலும் வேலையில் ஏற்படும் சிக்கல்கள் கவலையை அதிகரிக்கக்கூடும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது, ஆனால் இழப்புகளைத் தவிர்க்க மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரச்சினைகள் அதிகரிக்காமல் இருக்க, மேலதிகாரிகளுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். பணம் தொடர்பான விஷயங்களில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் தீர ஆலோசிக்க வேண்டியது அவசியம், அதே நேரத்தில் பயணம் மற்றும் மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சவாலான மாதமாக இருக்கப்போகிறது. சக ஊழியர்களிடம் உதவி கேட்க வேண்டிய சூழல் ஏற்படலாம். கடன் பிரச்சினைகளைத் தவிர்க்க செலவுகளை கவனமாக நிர்வகிப்பது அவசியம். ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல்நலனில் அக்கறை செலுத்துவது முக்கியம்.
நீண்ட பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளதால், வானிலை குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு தடைகளை எதிர்கொள்ளக்கூடும், மேலும் அலுவலகத்தில் மோதல்கள் அல்லது சதித்திட்டங்களில் சிக்கிக் கொள்வதில் எச்சரிக்கையாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
