Latest Updates
-
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
July 2025 Horoscope: ஜூலை மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் இந்த 3 ராசிகாரர்களை ராஜாவாக மாற்றப்போகுதாம்...!
July 2025 Monthly Horoscope: ஜூலை மாதம் பிறக்கப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தையும் வழங்கக்கூடும். சூரியப் பெயர்ச்சி 30 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது, இது மக்களின் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்களில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. இது அதிகாரம், தொழில் முன்னேற்றம் மற்றும் தந்தையைப் பிரதிபலிக்கிறது.
சூரியனின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு ஈகோ மோதல்கள், உடல்நலப் பிரச்சினைகள் அல்லது வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். அதேபோல செல்வம் மற்றும் அன்பின் கடவுளான சுக்கிரன் 23 நாட்களுக்குப் பிறகு பெயர்ச்சி அடைகிறார், இது காதல் மற்றும் நிதி நிலையைப் பாதிக்கிறது. ஆனால், இது உணர்ச்சி ஏற்றத்தாழ்வு மற்றும் உறவில் பதட்டங்கள் போன்ற சவால்களையும் கொண்டு வரக்கூடும்.

செவ்வாய் கிரகப் பெயர்ச்சி சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை நடக்கிறது, இது ஒருவரின் லட்சியம், போட்டித்தன்மை ஆக்குகிறது மற்றும் தைரியத்தைத் தூண்டுகிறது. செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் சவால்கள் விபத்துக்கள், வாக்குவாதங்கள் மற்றும் கோபப் பிரச்சினைகளையும் தூண்டும். ஜூலை மாதத்தில் இந்த 3 பெயர்ச்சிகளுமே நடப்பதால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ஜூலை மாதத்தில் நிகழும் 3 முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. இது பல்வேறு முடிக்கப்படாத பணிகளை முடிப்பதற்கான சிறந்த காலமாக இருக்கும், மேலும் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். ஒரு சிறப்பு நபரின் வருகைக்கான வாய்ப்புகள் உள்ளன, அவர் உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுவார்.
உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அதனால் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உறுதியுடன் வெளியே வர முடியும். திருமண வாழ்க்கையில், அமைதி இருக்கும், மேலும் நீங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த பெரிய உடல்நல பிரச்சனையையும் சந்திக்க மாட்டீர்கள், மேலும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தெளிவுடன் வெளியே வருவீர்கள்.
மிதுனம்
ஜூலை மாதத்தில் நிகழும் 3 முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. இதனால் அலுவலக வாழ்க்கையில், குறைவான பிரச்சனைகள் இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் சரியான முயற்சிகளால் வெற்றியை அடைய முடியும். மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் உங்கள் கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். உங்கள் கடந்த கால வேலைகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும்.
இந்த காலகட்டத்தில் பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன, மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள், மேலும் பல்வேறு பணிகளை வெற்றிகரமாகச் செய்வதில் உற்சாகமாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் நடக்கும் 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும், சாதகமான காலகட்டத்தையும் அனுபவிப்பார்கள். சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று நிதி நன்மைகளைப் பெறலாம். இதனுடன், உங்கள் முயற்சிகளால் பணி வாழ்க்கையில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் தலைமைத்துவ குணங்களும் கணிசமாக மேம்படுகின்றன, இதனால் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். உங்கள் வணிக திட்டங்கள் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்கலாம் மற்றும் நிறைய லாபம் ஈட்ட முடியும். சுக்கிரனின் அருளால், உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

