Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜனவரி மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
January 2026 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2026 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2026 ஜனவரி மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதம் காதல் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிக்கும். மாத இறுதியில் ஈகோவின் உச்சத்தைத் தவிர்க்க வேண்டும். அப்படியானால் தான் நிலைமை சாதகமாக இருக்கும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதமானது நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாத தொடக்கத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் கருத்தில் உறுதியாக இருந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதம் மிகவும் அற்புதமான மாதமாக இருக்கும். வாழ்வில் நல்ல மாற்றத்துடன் முன்னேற்றத்தையு காண்பீர்கள். மாத தொடக்கத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள் நேரிடும். நிதி ரீதியாக, முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாத இறுதியில், தனியாக இருப்பது போன்று உணரலாம்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதிக மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வது பதட்டத்தை அதிகரிக்கும். நிதானத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கை சந்தோஷமாக மாறும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஜனவரி மாத இறுதியில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஜனவரி மாதத்தில் நல்ல நிதி வளர்ச்சியைக் காண்பார்கள். உள்ளுணர்வால் எடுக்கும் முடிவுகளால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருந்தால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். வாக்குறுதிகளை கொடுக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஜனவரி மாத இறுதியில் வாழ்க்கையில் சமநிலையை பேண வேண்டும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். மனம் சற்று அமைதியற்றதாக இருக்கும். காதல் விஷயங்களில் உங்களின் முயற்சிகள் மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு இம்மாத இறுதியில் திருமணம் கைக்கூடும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதத்தில் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன திருப்தி அதிகரிக்கும். வேலைகளில் வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். செல்வம் பெருகும். எந்த ஒரு நிதி முடிவுகளையும் அனுபவசாலிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்க வேண்டும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதம் மிகவும் சிறந்த மாதமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன அமைதி அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜனவர் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நிதி ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். வேலையில் சில அழுத்தத்தை உணரக்கூடும். மனம் அமைதியற்றதாக இருக்கும். மாத இறுதியில் மட்டும் சற்று கடினமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











