Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
2026-ல் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சந்தோஷமா இருக்கப் போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2026: 2025 முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. வரப்போகிற புது வருடம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. அந்த மாற்றங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது ஒவ்வொரு ராசியைப் பொறுத்து மாறுபடும். 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஆண்டாக இருக்கும்.
அவர்களின் கடந்த கால காயங்கள் மறைந்து இப்போது மகிழ்ச்சி திரும்பும். சில ராசிக்காரர்கள் தங்கள் பாரத்தை மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கப்போகும் ஆண்டாக 2026 அமையப்போகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளின் படி இந்த ஆண்டு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையான ஆண்டாகவும், அவர்கள் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி தேடிவரும் வருடமாகவும் இருக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்போகிற புது ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கபோகிறது, அவர்கள் மனதிலிருந்த கவலைகள் இந்த ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது. கடந்த கால உறவுகளிலிருந்து வந்த கோபம், வருத்தம் மற்றும் சோகம் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த ஆண்டு உங்களின் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது. நீங்கள் மற்றவர்களை மட்டுமல்ல, உங்களையும் மன்னிப்பீர்கள். உங்கள் இதயம் மிகவும் லேசாக உணரும். புதிய காதல், புதிய சாகசங்கள் மற்றும் புதிய நண்பர்கள் என அனைத்தும் உங்கள் விருப்பப்படி நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு, 2026 மனநிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஆண்டாக இருக்கப்போகிறது. உங்களுக்குத் தேவையான விஷயங்களை அதிக சிரமமின்றி எளிதாகப் பெறுவீர்கள், உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயங்களில் அக்கறை செலுத்தத் தொடங்குங்கள். அலுவலகங்களில் உங்களுக்கு எதிரியாக இருந்தவர்கள் இப்போது உங்களுக்கு நண்பர்களாக மாறலாம். அலுவலகத்தில் உங்களின் மீது அனைவருக்கும் நம்பிக்கை திரும்பும். நீங்கள் அமைதியாகவும், வலிமையாகவும், நல்லவர்களையும், நல்ல அனுபவங்களையும் பெற இந்த ஆண்டு உங்களை தயார்படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த ஆண்டு தங்கள் வாழ்க்கையில் ஆறுதலையும், தெளிவையும் பெறலாம். உங்களைத் தடுத்து நிறுத்திய பயங்களையும் பாதுகாப்பின்மையையும் நீங்கள் இறுதியாகக் கடந்து வரலாம். மற்றவர்கள் மீது மட்டுமல்ல, உங்கள் மீதும் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். உங்களை உண்மையானவராகக் காணும் மக்களுடன் நீங்கள் உறவை வளர்த்துக் கொள்ளலாம், அது உங்கள் வாழ்க்கையில் உண்மையான அமைதியைக் கொண்டுவருகிறது. உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வசந்த காலம் திரும்பலாம். இந்த ஆண்டு தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இந்த ஆண்டு உங்களின் பழைய தவறுகள் மன்னிக்கப்படும் மற்றும் நீங்களும் மற்றவர்களை மன்னிப்பீர்கள். பழைய வலிகளை விட்டுவிடுங்கள், உங்களின் சுதந்திர உணர்வு அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியம் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் எடை குறைகிறது. நேர்மையான, ஆரோக்கியமான தொடர்புகள் உங்கள் வாழ்க்கையில் உருவாகலாம். இந்த ஆண்டு உங்கள் இதயம் முழுவதும் அன்பு நிறைந்திருக்கும். அது உங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

