Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Horoscope 2026: 2026-ல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் அதிர்ஷ்டம் கூடிவரப்போகுதாம்...!
Horoscope 2026: அனைவருக்கும் வாழ்க்கையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய கனவு என்னவெனில் அவர்கள் விரும்பும் ஒரு வீட்டை வாங்குவது என்பதுதான். நம் அனைவருக்குமே நமக்கென்று வசிக்க ஒரு சொந்த இடம் வேண்டும். ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் இந்த வருடமாவது நமக்கென சொந்த வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை அனைத்து மிடில் கிளாஸ் மக்களுக்கும் இருக்கும்.
2026 பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. 2026 ஆம் ஆண்டு புதிய நம்பிக்கைகளையும், வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின் படி சில சிறப்பு கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் யோகங்கள் உருவாகின்றன, அவை குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் 2026-ல் சொந்த வீடு வாங்குவார்கள் எனறு தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
2026 ஆம் ஆண்டு நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான சிறந்த பலன்களைத் தருகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் சர்ச்சைக்குரிய எந்த சொத்துக்களையும் வாங்காமல் இருப்பது நல்லது.
ஆனால், தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் அத்தகைய சொத்தை வாங்கினால், நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும், ஆனால் கவலைப்பட வேண்டாம் கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த ஆண்டு, செவ்வாய் கிரகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரக்கூடும், மேலும் குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருப்பார். இதனால் நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
துலாம்
2026 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது. கிரகங்களின் சாதகமான நிலையால் நீங்கள் வீடு, நிலம் அல்லது புதிய சொத்து போன்றவற்றை வாங்க முயற்சிக்கலாம். இந்த காலகட்டத்தில், நான்காவது வீட்டின் அதிபதியான சனி ஆறாவது வீட்டில் இருப்பார்.
அத்தகைய சூழ்நிலையில், நீதிமன்ற வழக்கில் சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாக முடிவடையும். வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு நிலவி வந்த தடைகள் இப்போது நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வாங்கும் சொத்துக்கள் அவர்களுக்கு பெரிய லாபத்தைக் கொடுக்கும். எனவே உங்களின் நீண்ட கால கனவு பலிக்கும் வருடமாக இது இருக்கும்.
மகரம்
2026 ஆம் ஆண்டு உருவாகும் சுப யோகங்கள் மகர ராசிக்காரர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் வாய்ப்புகளைத் தரப்போகிறது. இந்த யோகங்கள் அவர்களுக்கு நிலம் மற்றும் சொத்து கட்டுமானம் தொடர்பான விஷயங்களில் மக்கள் சிறந்த பலன்களை அளிக்கப்போகிறது. 2026 ஆம் ஆண்டில், உங்களின் நான்காம் வீட்டில் எந்த எதிர்மறையான கிரகங்களும் வரப்போவதில்லை.
இதனால் நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில், மகர ராசிக்காரர்கள் லாபத்தையும், வெற்றியையும் ஈட்ட முடியும். கடந்த காலத்தில் ஏதேனும் நிலம் அல்லது சொத்து ஒப்பந்தம் குறித்து நீங்கள் கவலைப்பட்டிருந்தால், இப்போது அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். வீடு அல்லது சொத்து வாங்குவதில் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, இப்போது வெற்றி தேடிவரப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
