Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
கொடூர நிலையில் 9 கிரகங்கள்.. இன்று முதல் அடுத்த 8 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Holashtak 2026: ஹோலி பண்டிகைக்கு முந்தைய 8 நாட்கள் ஹோலாஷ்டக காலமாகும். வேத நாட்காட்டியின் படி, ஹோலாஷ்டக காலம் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கியது. ஹோலாஷ்டக காலம் என்பது மிகவும் அசுபமான காலமாகும். வேத சாஸ்திரங்களின்படி, ஹோலாஷ்டகத்தின் எட்டு நாட்களும் அசுபமானதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் எந்த சுப வேலையும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதோடு இந்த 8 நாட்களும் சனி, குரு, புதன், சுக்கிரன், ராகு, கேது, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் அசுபமான மற்றும் கோபமான நிலையில் இருக்கும். மேலும் இக்காலத்தில் ராகு மற்றும் செவ்வாய் கும்பத்தில் சஞ்சரித்து, கொடூரமான அங்காரக யோகத்தை உருவாக்குகிறார்கள்.

இப்படியான கிரகங்களின் நிலைகளால் 5 ராசிக்காரர்கள் ஹோலி பண்டிகை வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது ஹோலாஷ்டக காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஹோலாஷ்டக காலத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அதோடு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு அவசர அல்லது திடீர் முடிவும் தீங்கு விளைவிக்கும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஹோலாஷ்டக காலத்தில் மன மற்றும் நிதி அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு என்பது இருக்காது. குழப்பமான மனநிலையுடன் இருக்க நேரிடும். செலவுகளும் திடீரென்று அதிகரிக்கும். நிறைய கடனை வாங்க வேண்டியிருக்கும். எந்த நிதி முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழப்பமான மனநிலையால் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஹோலாஷ்டக காலத்தில் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். தந்தை அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வேலையில் எந்த ஒரு ஆதரவும் கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும். வேலையில் ஆர்வம் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஹோலாஷ்டக காலத்தில் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஏழரை சனி நடப்பதோடு, அங்காரக யோகமும் உருவாவதால் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். பணியிடத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். மொத்தத்தில் பொறுமையின்மையும், கட்டுப்பாடு இல்லாததும் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஹோலாஷ்டக காலத்தில் மன உறுதியின்மை மற்றும் குழப்பத்தை சந்திக்க நேரிடும். இதனால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படக்கூடும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். முக்கியமாக இக்காலத்தில் நிதி தொடர்பாக அவசரமாக எந்த முடிவுகளை எடுத்தாலும், அது சுமையாக மாறும் என்பதால், நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
