Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
Hanuman Jayanti 2025: இன்று உங்க ராசிப்படி இத செய்யுங்க.. அனுமனின் ஆசியால் கஷ்டம் தீரும்..
Hanuman Jayanti 2025: ராமரின் தீவிர பக்தரும், அஞ்சனையின் மகனும் தான் அனுமன். இந்த அனுமன் பிறந்த தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அனுமன் ஜெயந்தி இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.
அதில் வடஇந்தியாவில் சித்திரா பௌர்ணமி நாளிலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அனுமன் கோவில்களில் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வழிபாடுகள் செய்யப்படும். மேலும் இந்த சுப தினத்தில் அனுமனின் ஆசியைப் பெற மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களும், தங்கள் ராசிக்கேற்ப பரிகாரங்களை செய்தால் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும், கஷ்டங்களும் குறைந்து, வாழ்க்கை செழிப்பாக இருக்கும். இப்போது அனுமன் ஜெயந்தி நாளில் 12 ராசிக்காரர்களும் என்னென்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அனுமன் பிறந்த நாளில் அனுமன் அஷ்டகத்தை பாராயணம் செய்து, பூந்தியை பிரசாதமாக செய்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால், பலமடையும்.
ரிஷபம் மற்றும் துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள் அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனை வழிபாடு செய்து, சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதோடு, அனுமனின் அம்சமாக கருதப்படும் குரங்குகளுக்கு இனிப்புக்களை வழங்க வேண்டும். இப்படி செய்யும் போது அது ஜாதகத்தில் வலுவிழந்து இருக்கும் சுக்கிரனை பலப்படுத்தும்.
மிதுனம் மற்றும் கன்னி
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி புதன். இந்த புதனை அதிபதியாக கொண்டவர்கள் அனுமன் பிறந்தநாளான அனுமன் ஜெயந்தி நாளில் ஆரண்ய காண்டத்தை பாராயணம் செய்வதோடு, நெய் தீபம் ஏற்றி, கிராம்பு பதித்த வெற்றிலையை அனுமனுக்கு படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஜாதகத்தில் உள்ள புதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு வெள்ளி கடாயுதம் படைத்து, அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சந்திரன் பலப்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு இனிப்புக்களை தானம் செய்ய வேண்டும். மேலும் பாலகண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். இது ஜாதகத்தில் உள்ள சூரியனை வலுப்படுத்தும்.
தனுசு மற்றும் மீனம்
தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானை அதிபதியாக கொண்டவர்கள் அனுமன் ஜெயந்தி நாளில் அயோத்தி காண்டத்தை பாராயணம் செய்வதோடு, மஞ்சள் நிற பூக்கள், பழங்கள் மற்றும் இனிப்புக்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
மகரம் மற்றும் கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானை அதிபதியாக கொண்டவர்கள் அனுமன் ஜெயந்தி நாளில் ராமசரிதமானஸை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுத்தம் பருப்பை நிரப்பி, அனுமனுக்கு படைத்து வழிபட்ட பின் அதில் நீரை ஊற்றுங்கள். இதன் மூலம் அனுமன் மற்றும் சனி பகவானின் ஆசியும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications