Latest Updates
-
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
Gemini Horoscope 2025: நீங்க மிதுன ராசியா? வர 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்க இத படிங்க..,
Gemini Horoscope 2025 In Tamil: ஆங்கிலப் புத்தாண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவ கிரகங்களின் பயணத்தாலும் மிதுன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பிறக்கும் போதே கிரகங்களின் பயணம் அற்புதமாக உள்ளது. பாக்ய ஸ்தானத்தில் உள்ள சனி பகவான் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனை தரப்போகிறார். குரு பலன் ஆண்டு முழுவதும் கிடைக்கப் போவதால் திடீர் மாற்றங்கள் ஏற்படப் போகிறது. ராகுவும், கேதுவும் உங்களின் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகின்றனர்.

கிரகப்பெயர்ச்சிகள்
புத்தாண்டின் முற்பகுதியில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு ஜென்ம ராசியிலும் ஆண்டின் இறுதியில் இரண்டாவது வீட்டிலும் பயணம் செய்வார். சனி பகவான் மார்ச் மாதம் வரைக்கும் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வார்.
2025 மார்ச் இறுதியில் சனிபகவான் 10 ஆம் வீட்டில் கர்ம சனியாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஆண்டின் முற்பகுதியில் பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் ராகு மே மாதத்திற்குப் பிறகு 9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கும் 4 ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது மூன்றாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன.
குடும்ப வாழ்க்கை
குரு பகவான் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வார். பண வருமானம் அதிகரித்தாலும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். குரு பகவானின் பயணத்தினால் உங்களுக்கு பல வழிகளிலும் பணம் வரும். மே மாதத்தின் மத்தியில் இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் ஜென்ம குருவாக வந்து உங்கள் ராசியில் அமரப்போகிறார்.
குருபகவானின் பயணத்தால் குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும் உங்கள் ராசிக்கு 5, 7, 9ஆம் இடங்களின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணம், சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆண்டு முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
வேலை தொழில்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் சனிபகவான் உங்களுக்கு பலவித நன்மைகளை செய்யப்போகிறார். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழப்போவதால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும், விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
கர்ம சனி காலம் என்பதால் செய்யும் வேலைகளில் கவனம் தேவை. யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். மன தைரியம் அதிகரிக்கும்.
பொருளாதார நிலை
அக்டோபர் மாத இறுதியில் குருபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப் போவதால் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சிலருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும்.
பெண்கள்
2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ராகு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பெண்களுக்கு வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கேது நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மே மாதத்தில் ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் அப்பா வழி சொந்தங்களிடம் கவனம் தேவை. திடீர் ஆன்மீக சுற்றுலா சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வரப்போகிறது. வெளிநாடு வேலைக்காக செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கேது முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமும் பாதகமும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications