Latest Updates
-
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது!
பிப்ரவரி இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Gajkesari Rajyog On 26 February 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் கிரகங்களிலேயே மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். மேலும் இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் இருப்பார் மற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் இந்த மிதுன ராசிக்கு மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் பிப்ரவரி 26 ஆம் தேதி நுழையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் காரணமாக சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகமும் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதே வேளையில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைத் தரப்போகிறது. இப்போது மிதுன ராசியில் ஒன்றிணையும் குரு மற்றும் சந்திரனால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நேர்மறையான எண்ணங்களுடன் நிறைந்திருப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். மொத்தத்தில் குருவின் அருளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பதங்களைப் பெறுவார்கள். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
