Latest Updates
-
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
February Month Rasi Palan 2025: உங்க ராசியை சொல்லுங்க.. வர பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
February Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் பிப்ரவரி மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் பிப்ரவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என பிப்ரவரி மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் உங்கள் இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் வேகமாக செல்வீர்கள். மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையுடன், உறவுகளிலும் சமநிலையை பராமரிக்க வேண்டும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், தேவையில்லாத செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, தனிப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடன் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். ஆனால் வெளிப்படையாக பேசுவதுடன், பொறுமையாக எதையும் கையாண்டால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நிதி நிலை கடந்த மாதத்தை விட சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஆனால் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் கடின உழைப்பால் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் பதட்டங்கள் அதிகரிக்கலாம். ஆனால் மனம்விட்டு அமைதியாக பேசுவதன் மூலம் பிரச்சனைகள் தீரும். நிதி நிலை சுமாராக இருக்கும். முதலீடு செய்வதாக இருந்தால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது உங்களுக்கு உற்சாகமான மாதமாக இருக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறமையால் புதிய உச்சத்தை அடைவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் புதிய திட்டங்களையும் யோசனைகளையும் செயல்படுத்துவீர்கள். எதையும் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். இது பணியிடத்தில் உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். இருந்தாலும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் நிதி நிலை சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் தொழில் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலையில் பராமரிக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இருந்தாலும், எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் தொழிலில் மெதுவான முன்னேற்றம் ஏற்படலாம். உறவுகளில் உணர்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். நிறைய வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் முயற்சிகள் நல்ல பாராட்டைப் பெறும். ஆனால் உறவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தி நல்ல வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் உங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சமநிலையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் எந்த முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண புதிய வழியை கையாள்வீர்கள். உறவுகளில் ஆழம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக இந்த மாதம் லாபகரமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications