Latest Updates
-
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
February 2026 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2026 பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பிப்ரவரி மாதம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் அவசரப்பட்டோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சிந்திக்காமல் எதையும் செய்யாதீர்கள். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிறப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிப்ரவரி மாதம் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாற்ற நினைக்கும் விஷயங்களில் நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். பயணம், பொழுதுபோக்கு மற்றும் சுய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சட்ட விஷயங்களில் சிக்கியிருந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில், பிப்ரவரி மாதம் சாதகமாக இருக்கும்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிப்ரவரி மாதம் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், இறுதியில் அனைத்தும் சரியாகும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். ஏற்கனவே உறவுகளில் உள்ளவர்களிடையே புரிதல் அதிகரிக்கும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தால் பிப்ரவரி மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் தவறுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சில உறவுகள் உங்களை ஏமாற்றலாம்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பிப்ரவரி மாதத்தில் நிதி விஷயங்களில் சில சவால்களை சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். எந்த வேலையை செய்தாலும் அதை கவனமாக செய்ய வேண்டும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பிப்ரவரி மாதத்தில் எந்த ரிஸ்க்குகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். உணர்ச்சி அல்லது கோபத்தால் முடிவுகளை எடுக்காதீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுங்கள். உறவுகளை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். கைமீறி விஷயங்கள் செல்லும் போது, அமைதியாக இருக்க வேண்டும். முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எந்த வேலையையும் கடினமாக உழைத்தால், வெற்றி நிச்சயம். மொத்தத்தில் இந்த மாதம் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும், ஆனால் கூடுதல் முயற்சி தேவைப்படும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் வேலை மெதுவாகவே நடக்கும். ஆனால் பலன்கள் நீடித்து நிலைத்திருக்கும். உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இதன் மூலம் உறவுகள் மேம்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் பொறுமையை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் கடின உழைப்பு சராசரியை விட சிறந்த பலன்களைத் தரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். படைப்புத் துறைகளில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இம்மாதத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications