Latest Updates
-
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.!
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தோல்விகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்குமாம்... உங்க ராசி என்ன?
February 2026 Horoscope: பிப்ரவரி மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன. இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையானதாகவும், எதிர்மறையானதாகவும் இருக்கும். சில ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதம் மகத்தான அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் அதிக சவால்களையும், சிக்கல்களையும் உருவாக்கும்.
பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை அனுபவிக்கப்போகிறார்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிக்கலை ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் பிப்ரவரி மாதத்தில் தீராத துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சிரமங்களும், நிதி சிக்கல்களும் நிறைந்த மாதமாக இருக்கும். பெரும்பாலும் உங்களுக்கு எதிர்பாராத பல பிரச்சினைகள் ஏற்படும்.சாதகமற்ற சூழ்நிலைகளால் விருச்சிக ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.
அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சோதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அவர்கள் சில உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த மாதம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் வீண் செலவுகளும், ஆரோக்கிய பிரச்சினைகளும் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. மாதத்தின் பிற்பகுதி மிகவும் மோசமானதாக இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் இழப்பார்கள். மேலும் நெருங்கிய ஒருவரால் அவமதிப்பை சந்திக்க நேரிடும்.
தங்கள் உடல்நலத்தைப் பற்றி நினைத்து அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அவர்கள் தொழிலில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். இது அவர்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்களை அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில் துரதிர்ஷ்டம் அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் பல தடைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் சிக்கல்களை சந்திக்கப் போகிறார்கள். கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகளிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், குடும்பத்தில் சில பதட்டமான சூழல் நிலவக்கூடும், மேலும் வேலையில் ஏற்படும் சிக்கல்கள் கவலையை அதிகரிக்கக்கூடும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது, ஆனால் இழப்புகளைத் தவிர்க்க மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரச்சினைகள் அதிகரிக்காமல் இருக்க, மேலதிகாரிகளுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். பணம் தொடர்பான விஷயங்களில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் தீர ஆலோசிக்க வேண்டியது அவசியம், அதே நேரத்தில் பயணம் மற்றும் மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












